மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. ரு.50,000 ஊக்கத் தொகை தரும் தமிழக அரசு - எப்படி பெறலாம்?

Tamil Nadu Government: மாணவர்களுக்கு போட்டித் தேர்வின் மூலம்  தமிழக அரசு ரூ.50,000 ஊக்கத் தொகையாக வழங்குகிறது. இந்த ஊக்கத் தொகை பெற எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.  

Written by - Umabarkavi K | Last Updated : Nov 15, 2025, 11:28 AM IST
  • யுபிஎஸ்சி போட்டித் தேர்வு
  • மாணவர்களுக்கு ரூ.50,000 தரும் அரசு
  • விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. ரு.50,000 ஊக்கத் தொகை தரும் தமிழக அரசு - எப்படி பெறலாம்?

Naan Mudhalvan Scheme UPSC Incentive: தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் உயர்க் கல்வி படிக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், போட்டித் தேர்வு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்குவதோடு, அவ்ரகளுக்கு ஊக்கத் தொகையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வை எதிர்கொள்பவர்களுக்கு ஊக்கத் தொகையாக தமிழக அரசு ரூ.50,000 வழங்குவதாக அறிவித்துள்ளது.

Add Zee News as a Preferred Source

யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை

யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இந்த ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் இருந்து அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, முதல்நிலை தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், 10 மாதங்களுக்கு ரூ.7500 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து, முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டில் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்ட நிலையில், முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வுக்கு தயாராகும் தமிழக மாணவர்களுக்கு தமிழக அரசு ரூ.50,000 ஊக்கத் தொகை வழங்க இருக்கிறது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் இயங்கி வரும், நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக ரூ.50,000 ஊக்கத் தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. 2025ஆம் ஆண்டு முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற 155 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்த ஊக்கத் தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் Naanmudhalvan.TN.Gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.  இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பிப்பதற்கு தேர்வு அடையாள எண்வங்கி கணக்கு விவரங்கள்செல்போன் எண் போன்ற ஆவணங்களை தேவைப்படுகிறதுஇதனை வைத்து கொண்டு மாணவர்கள் ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

மாணவர்கள் விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அதாவது, நவம்பர் 24ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிப்பதற்கு தேர்வு அடையாள எண், வங்கி கணக்கு விவரங்கள், செல்போன் எண் போன்ற ஆவணங்களை தேவைப்படுகிறது. இதனை வைத்துக் கொண்டு மாணவர்கள் ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரேஷன் கார்டு முக்கிய அப்டேட் : கைவிரல் ரேகை பதிவு செய்யவில்லையா?

மேலும் படிக்க: டிசம்பர் 15ல் தமிழ்நாட்டு பெண்களுக்கு வரப்போகும் ரூ.1000 - ரெடியா மக்களே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

 

 

 

 

 

 

About the Author

Trending News