)
Salem South TVK MLA: சேலம் தெற்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அ. விஜய் தமிழன் பார்த்திபன் அரசியலில் புதிய ட்ரெண்டை உருவாக்கி மாஸ் காட்டி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் அவர் தொடங்கிய 'Digital Help Desk' அத்தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. ரமணா படத்தில் வரும், 'யாருப்பா அவரு? எனக்கே அவர பார்க்கணும் போல இருக்கே!' என பலரும் எண்ணும் வகையில், சில அதிரடி அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார். "நோ பிளக்ஸ், நோ பேனர், நோ சால்வை.... ஒன்லி பப்ளிக் சர்வீஸ்!" என்ற ரீதியில் தொகுதி மக்களின் குறைகளுக்கு டிஜிட்டல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சேலம் தெற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ தமிழன் பார்த்திபன்.
தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். மாற்றத்திற்கான விடையாக, ஊழலின் எதிர்ப்பாக, பெண்களின் பாதுகாவலனாக, தங்கள் வீட்டில் ஒருவராக பெரும்பாலான மக்கள் சேர்ந்து அவரை சி.எம். பதவியில் அமர வைத்துள்ளார்கள். தேர்தல் பிரச்சாரத்தில் அவர் கொடுத்த வாக்குறுதிகளும், பதவி ஏற்பு விழா உரையில் தெரிந்து அர்ப்பணிப்பும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தமிழகம் நிச்சயம் ஒரு பெரிய மாற்றத்தைக் காணும்.
முதல்வராக பதவி ஏற்ற உடனேயே அவர் கூறிய சில விஷயங்கள் பலரது கவனத்தை கவர்ந்தன. மாநிலத்தின் முதலமைச்சராக தான் என்ன செய்வேன் என கூறியது மட்டுமல்லாமல், தனது கட்சியில் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அவர் கோடிட்டுக்காட்டினார். இது மக்களுக்கு இன்னும் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது.
முதலமைச்சராக அனைவரது பாராட்டையும் உடனடியாக பெறுவது சாத்தியம் இல்லை. அதற்கு சிறிது காலம் செல்ல வேண்டும். ஆனால், தொடக்கம் நன்றாக இருந்தால், தொடர்வதும் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு பிறக்கும். அந்த வகையில் முதல்வர் விஜய் முதல் பந்திலேயே சிக்சர் அடித்துள்ளார் என்றுதான் கூற வேண்டும். பதவியேற்பு விழா மேடையிலேயே, பொதுமக்களுக்கு 200 யூனிட்கள் இலவச மின்சாரம், பெண்களுக்கு சிங்கப் பெண் அதிரடிப்படை, போதை பொருட்களுக்கு எதிரான போதைப்பொருள் தடுப்புப் படைகள் என்று 3 முக்கிய திட்டங்களை அறிவித்தார். இதன் மூலம் மக்கள் மனதிலும் நம்பிக்கையை வித்திட்டுள்ளார்.
தமிழக முதல்வர் விஜய் மட்டுமல்லாமல், அவரது கட்சியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் மக்களுக்கான பணிகளை செய்வதிலும், குறைகளை தீர்க்கும் முயற்சிகளை எடுப்பதிலும் மக்களுடன் தொடர்பில் இருக்க அக்கறை காட்டுவதிலும் முனைப்புடன் இருப்பதை பார்க்க முடிகின்றது.
அந்த வகையில், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தமிழன் பார்த்திபனின் செயல்கள் மக்களின் கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகின்றன. சமீபத்தில் தனது X தளத்தில் சில முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
ஃப்ளெக்ஸ், பேனர்கள் மற்றும் பதாகைகள் குறித்து கூறியுள்ள அவர், தன்னை வரவேற்கும் நோக்கில் பொதுமக்களுக்கும், பாதசாரிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் பதாகைகள் வைப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகளில் சால்வை அணிவித்தல், பூங்கொத்து வழங்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ள அவர், அதற்கு பதிலாக, ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரிசி, பருப்பு, எண்ணெய், மாணவர்களுக்கான பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்களை வழங்கலாம் என பரிந்துரைத்துள்ளார்.
கழகத் தோழர்கள் கடைபிடிக்க வேண்டிய கண்ணியம், பொறுமை மற்றும் நாகரிகமான அணுகுமுறை பற்றியும் அவர் விளக்கியுள்ளார். இவை தவிர இன்னும் சில முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தனது சட்டமன்ற தொகுதியில் நிகழும் ஒவ்வொரு செயலிலும் நேர்மறையான செயல்பாடுகளையும், நாகரிகமான நடவடிக்கைகளையும், வெளிப்படையான மக்கள் நல பணிகளையும் அவர் எதிர்பார்க்கிறார் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது.
முக்கிய அறிவிப்பு
— Tamilan Parthiban (@TamilanParthib1) May 15, 2026
அன்பிற்கினிய கழகத் தோழர், தோழிகளே,
உங்கள் அன்பு சகோதரனின் வேண்டுகோளை ஏற்று, எனது வரவேற்பை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.C. ஜோசப் விஜய் அவர்களின் நேர்மையான ஆட்சியின் கீழ், தமிழக அரசின் நற்பெயரையும், மக்கள்… pic.twitter.com/tRnGE0osy3
சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ
| பெயர் | அ விஜய் தமிழன் பார்த்திபன் |
| கட்சி | தவெக |
| தொகுதி | சேலம் தெற்கு |
| 2026 சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் | 91,371 |
| சேலம் தெற்கு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை | 2,26,851 |
மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள தமிழன் பார்த்திபன் பல வகையில் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். அதில் குறிப்பிடப்பட வேண்டியது மக்களுக்கான ' Digital help desk. இதை தொடக்கி வைத்து தனது X தளத்தில் பதிவிட்ட அவர், தன்னை மக்கள் ஒரு பதவிக்காக தேர்ந்தெடுக்கவில்லை என்றும், அவர்களது குரலாகத்தான் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்றும் தெரிவித்தார். வீட்டு பிரச்சனை முதல் பகுதியின் தேவைகள் வரை அனைத்தையும் ஒரு தொலைபேசி அழைப்பிலேயே தன்னிடம் தெரிவிக்கலாம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மக்கள் தன்னை தொடர்பு கொள்ளும் வகையில் கீழுள்ள முக்கிய விவரங்களை பகிர்ந்துள்ள அவர், தன்னை வீட்டின் ஒரு உறுப்பினராக எண்ணி குறைகளை பகிர்ந்துகொள்ளுமாறு கூறியுள்ளார்.
மக்கள் தெரிவிக்கும் குறைகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்யப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
அன்பார்ந்த சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி மக்களே!
— Tamilan Parthiban (@TamilanParthib1) May 15, 2026
நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தது
ஒரு பதவிக்காக அல்ல…
உங்கள் குரலாக நிற்கத்தான்.
உங்கள் வீட்டின் பிரச்சனை முதல்
உங்கள் பகுதியின் அடிப்படை தேவைகள் வரை…
இனி உங்கள் குறைகளை சொல்ல
அலுவலகம் தேடி அலைய வேண்டாம்…
ஒரு அழைப்பு போதும்…… pic.twitter.com/svEQtYoGsI
சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆ.பார்த்திபனின் இந்த முன்னெடுப்பு மக்களிடையே வரவேற்பையும், உற்சாகத்தையும் பெற்றுள்ளது. தேர்தலில் வெற்றிபெற்றவுடன் தொகுதியை திரும்பிக்கூட பார்க்காத சட்டமன்ற உறுப்பினர்களையே பெரும்பாலும் காணும் மக்களுக்கு இந்த அணுகுமுறை சற்று வித்தியாசமாகத் தான் இருக்கிறது.