Vijay Sangeetha Divorce Case Update: விஜய் சங்கீதா விவாகரத்து விவகாரம் தற்போது பேசும் பொருளாக மாறி வருகிறது. கோலிவுட் சினிமாவில் உச்சபட்ச நடிகராக இருக்கும் விஜய், தற்போது அரசியல் களத்திற்கு வந்துள்ளார். தேர்தல் வரும் சமயத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை மிகப் பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
Vijay Sangeetha Divorce Case: விவாகரத்து வழக்கு குறித்து பேசிய விஜய்
ஒருபக்கம் விஜய்க்கு ஆதரவாகவும், மற்றொரு பக்கம் சங்கீதா மற்றும் த்ரிஷாவுக்கு எதிராக சோஷியில் மீடியாவில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. இதில் என்ன தான் விஜய் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவருக்கு ஆதரவாக தான் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் விஜயின் மீது தவறு என ஒருசிலர் கூறி வந்தாலும், பெரும்பாலான மீம்ஸ்கள், ட்ரோல்கள் த்ரிஷா மற்றும் சங்கீதாவை டார்கெட் செய்தே சோஷியல் மீடியாவில் பதிவிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், முதல்முறையாக நேற்று (மார்ச் 7) நடந்த சர்வதே மகளிர் தின விழாவில் சங்கீதா விவாகரத்து விவகாரம் குறித்து வாய்த்திறந்துள்ளார். இந்தநிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, "சமீபத்தில் நிறைய பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதற்காக நீங்கள் வருந்துவதைப் பார்க்க முடிகிறது. அதைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருக்கிறது.
Vijay Sangeetha Divorce Case: எதிர்வினையாற்றும் பெண்கள்
அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறன். நாம் அனைவரும் சேர்த்து மக்கள் பிரச்னைகளைப் பார்ப்போம். அவ்வளவு எல்லாம் வருத்தப்படாதீர்கள். அது வொர்த் இல்லை" என பேசியிருந்தார். விவாகரத்து குறித்து விஜய் ’வொர்த் இல்லை' கூறியது சோஷியல் மீடியாவில் எதிர்ப்புகளை கிளப்பி இருக்கிறது. விவாகரத்து போன்ற ஒரு சீரியஸான விஷயத்தை விஜய் விளையாட்டாக அணுகியது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் விஜயின் கருத்துக்கு எதிர்வினையாற்றி வருகின்றனர்.
குறிப்பாக, விஜயை ஆணாதிக்கவாதி என்றும் ஆணவத்தோடு செயல்படுவதாகவும், மரியாதை இல்லாமல் சங்கீதாவை துச்சமாக பேசியதாவும் பெண்ணுரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் விஜய் அவ்வாறு பேசவில்லை என தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் கூறி வருகின்றனர். விஜயின் பேச்சு தவறாக சமூக வலைதளங்களில் பரபரப்பப்பட்டு வருவதாகவும் தவெக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Vijay Sangeetha Divorce Case: தவெக தொண்டர்கள் விளக்கம்
உங்கள் நேரத்தை என்னுடைய தனிப்பட்ட பிரச்னைகளை பற்றி சிந்திக்காமல், மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும் என தான் விஜய் கூறினார் எனவும் தவெக தொண்டர்கள் தெரிவித்துள்ளார். எனவே, அவர் சங்கீதா விவாகரத்து விஷயத்தை அவர் வொர்த் இல்லை என சொன்னதாக தவறாக சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
Vijay Sangeetha Divorce Case: விஜய் சங்கீதா விவாகரத்து விவகாரம்
நடிகை விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் அவர் மனு தாக்கல் செய்த நிலையில், பிப்ரவரி 27ஆம் தேதி இந்த தகவல் வெளியாகியது. சங்கீதா தாக்கல் செய்த மனுவில், கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனது கணவர் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரிந்தது.
இந்த விவகாரம் குறித்து எனது வழக்கறிஞர் மூலம் 2021 -2022 பிப்ரவரி இடையே, விஜயிடம் பேசினேன். ஆனால் இதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த உறவை நான் தட்டிக் கேட்டதால், பொருளாதார ரீதியாக நிறைய கட்டுப்பாடுகளை விஜய் விதித்தார். தொடர்ந்து, அந்த நடிகையுடன் வெளிநாடுகளுக்கு சென்றார்.
அந்த நடிகை இவர்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது எனக்கும், என் குழந்தைகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. இந்த விவாகரத்தில் நீதிமன்றத்திற்கு தேவைப்பட்டால், எனது கணவர் நடிகைக்குமான உறவு குறித்து ஆதாரங்களையும் வெளியிட தயாராக உள்ளேன்" என தெரிவித்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்த பரபரப்பு நீங்குவதற்குள் அண்மையில் பிரபல தயாரிப்பார் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய், திரிஷா ஒரே நிறத்தில் ஆடைகளை அணிந்து, ஒன்றாக வந்தது. பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று சங்கீதா புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க விஜய்க்கு உத்தரவிட கோரி இடைக்கால மனுவை ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், பிரிட்டிஷ் குடியுரிமை கொண்ட எனக்கு இந்தியாவில் வேறு இருப்பிடம் இல்லை என்பதால், இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை, கடந்த 26 ஆண்டுகுளாக விஜயுடன் வசித்து வந்த நீலாங்கரையில் உள்ள அவர் இல்லத்தில் தொடர்ந்து வசிப்பதற்கான உரிமையை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜயின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், திரையுலகிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: விஜய்யின் அதிரடி தேர்தல் அறிவிப்புகள் - கேஸ் சிலிண்டர் முதல், மாதம் 2500 வரை!
மேலும் படிக்க: சங்கீதா விவாகரத்து வழக்கு: மௌனம் கலைத்தார் விஜய்... என்ன சொன்னார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









