Savukku Shankar News: சென்னை கீழ்பாக்கத்தில் பிரபல யூ-ட்யூபரான சவுக்கு சங்கர் வசித்து வருகிறார். அவரது வீட்டில் தாக்குதல் இன்று அவரது X தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வகையில், தனது வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக புகார் கொடுக்க கீழ்பாக்கம் ஜி3 காவல் நிலையத்திற்கு சவுக்கு சங்கர் இன்றிரவு வருகை தந்தார்.
Savukku Shankar News: செல்வப்பெருந்தகைக்கு ரூ.150 கோடி லாபம்
கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரை கொடுத்த பின் செய்தியாளர்களை சந்தித்த யூட்யூபர் சவுக்கு சங்கர் பேசியதாவது,"சவுக்கு மீடியா ஊடகத்தில் தொடர்ந்து சில ஆண்டுகளாக தமிழக அரசில் நடைபெற்று வரும் ஊழல்களையும், நிர்வாக சீர்கேடுகளையும் பதிவு செய்து வருகிறோம். துப்புரவு தொழிலாளர்களுக்கு கழிவு நீர் வெளியேற்றும் வாகனம் வழங்குவதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு நடந்துள்ளது.
துப்புரவு தொழிலாளர்களுக்கு வாகனம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசே செயல் படித்திருக்க முடியும், ஆனால் அதை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள். இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை 150 கோடி ரூபாய் லாபமடைந்துள்ளார்.
Savukku Shankar News: தாக்குதல் நடத்திய 50 பேர்
இந்த திட்டத்தில் பயனடைந்தவர்களில் 130 பேர் காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்தவர்கள். மத்திய, மாநில அரசு சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு வழங்கும் மானியத்தில் செல்வபெருந்தகை கொள்ளையடித்துள்ளார் என எனது பக்கத்தில் பதிவு செய்திருந்தேன்.
காவல்துறை நினைத்திருந்தால் என் வீட்டின் மீது நடந்த தாக்குதலை தடுத்திருக்க முடியும். காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த வழக்கறிஞர் 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை ஊர்வலமாக அழைத்து வந்து என் வீட்டில் தாக்குதல் சம்பவம் நடத்துகிறார். ஆனால், எதுவும் தெரியாமல் உளவுத்துறை இருக்கிறதா... தாக்குதல் நடந்ததால் கீழ்பாக்கம் வீட்டின் உரிமையாளர் என்னை வீட்டை காலி செய்யும்படி கூறுகிறார்.
Savukku Shankar News: வீடு முழுவதும் கொட்டிய மலம் கலந்த கழிவுகள்
தாக்குதல் நடந்த போது நான் வீட்டில் இருந்திருந்தால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். காவல் நிலையத்தில் எனது தாயார் புகார் கொடுத்துள்ளார். மலம் கலந்த கழிவுகளை சமையலறை, குளியலறை, படுக்கையறை, வளாகம் என எல்லா இடங்களிலும் கொட்டியுள்ளார்கள்.
வாணிஸ்ரீ விஜயகுமார் என்ற காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த வழக்கறிஞரின் தூண்டுதலில் தான் அவர்கள் வந்துள்ளார்கள். வந்தவர்கள் தூய்மை பணியாளர்களா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. வந்தவர்கள் தூய்மை பணியாளர்களாக இருந்திருந்தால் எனது வீடியோவை பார்த்துவிட்டு சந்தோசம்தான் அடைந்திருப்பார்கள்.
Savukku Shankar News: தமிழக அரசின் மீது ஊற்றப்பட்ட மலம்
இந்த வழக்கில் காவல்துறை விசாரணைக்கு அழைத்தால் தான் நிச்சயமாக ஒத்துழைப்பு கொடுப்பேன். எனக்கு ஆதரவாக அறிக்கை கொடுத்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எனது எதிர்கால நடவடிக்கை குறித்து இரண்டு நாட்களில் அறிக்கையாக பதிவு செய்ய உள்ளேன். இந்த சம்பவத்தில் எனது தாயார் மிகவும் வருத்தப்பட்டார்.
பின் வாசல் கதவில் எனது தாயார் இருந்திருந்தார் என்றால் நிச்சயம் அவரும் உயிரிழந்திருப்பார். என் வீட்டில் நடந்த தாக்குதலின் பின்புலத்தில் காவல்துறை உள்ளதாக நான் சந்தேகம் கொள்கிறேன். நான்காண்டு காலமாக திமுக ஆட்சி எப்படி நடக்கிறது என்று கூறினேனோ அதற்கு என் வீட்டின் நடந்த சம்பவம் உண்மை என்பதை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.
இன்று என் வீட்டில் ஊற்றிய மலம் என் வீட்டில் ஊற்றப்பட்ட மலம் அல்ல, தமிழக அரசின் மீதும் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கின் மீதும் ஊற்றப்பட்ட மலம். தமிழக அரசு ஆட்சி நடத்தும் லட்சணத்தின் மீது ஊற்றப்பட்ட மலம்" என தெரிவித்தார்.
Savukku Shankar News: சவுக்கு சங்கர் பகிர்ந்த வீடியோ
இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் சவுக்கு சங்கர் X தளத்தில் பகிர்ந்திருந்தார். அதே போல், அவர் இன்று காலை 11.25 மணிக்கு போட்ட பதிவில்,"இன்று காலை 9.30 மணி முதல், துப்புரவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
என் வீட்டில் கழிவுகளை கொட்டும் சிசிடிவி காட்சி. pic.twitter.com/ZZQ6GpLBIR
— Savukku Shankar (@SavukkuOfficial) March 24, 2025
நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த இந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டினர். என்ன நடந்தது என்று என் தாயாருக்கு போன் செய்தபோது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன். ஒரே ஒரு உதவி ஆய்வாளரும் ஒரு காவலரும் மட்டும் வந்தனர். காலை 9.30 மணி முதல் இதுவரை போராட்டம் நடத்தியவர்கள் அந்த இடத்தை விட்டு அகலவில்லை. அந்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். யாருடைய தூண்டுதலில் இந்தத் தாக்குதல் நடைபெறுகிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை" என குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | திருப்பரங்குன்றம் விவகாரம்: சென்னை வேல் பேரணி வழக்கு - உச்ச நீதிமன்றம் உத்தரவு என்ன?
மேலும் படிக்க | சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து அழும் நித்தியானந்தா சிஷ்யைகள்... என்ன நடந்தது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ