)
School College Leave Latest Updates: கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு நாளை (அக். 23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நவம்பர் 15ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் சதீஸ் அறிவித்துள்ளார்.
இன்று இரவு 10 மணிவரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, மதுரை, திருச்சி, சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், அரியலூர், கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட், அதாவது கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (அக். 23) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணித்து ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த சில நாள்கள் தமிழ்நாட்டின் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று காலையில் போட்ட பதிவில், "வட தமிழக கடற்கரையில் புதுச்சேரி அருகே உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரேபிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்துடன் இணைந்து நிலப்பகுதிக்கு நகரும். மாநிலம் முழுவதும் மழை குறையும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது. சென்னையிலும் பல இடங்களில் 100 மிமீ மழை பதிவாகி உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை 1-2 நாட்கள் கனமழையை அளித்துள்ளது. சில இடங்களில் இன்றும் இடைவிடாது குறுகிய கால மழை பெய்யும்" என குறிப்பிட்டிருந்தார். மேலும் அடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் அக். 25ஆம் தேதி உருவாகும் என்றும் அவர் கணித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ