Puducherry School Holiday November 15: மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாகும். ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் கடும் வெப்ப அலை வீசியதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. புதுச்சேரியில் கடந்த ஏப். 28, 29, 30 ஆகிய மூன்று நாள்களுக்கு வெப்ப அலை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த மூன்று நாள் வேலை நாளை ஈடுசெய்ய, வேறு நாள்களில் பள்ளிகளில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. அதாவது மூன்று சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி, ஆகஸ்ட் 2 மற்றும் ஆகஸ்ட் 30ஆம் தேதிகளில் பள்ளிகள் இயக்கப்பட்டன.
Puducherry School Holiday: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
அதேநேரத்தில், ஏப்ரலில் கொடுக்கப்பட்ட விடுமுறைக்கு ஈடாக நவம்பர் 15ஆம் தேதி அன்று (அதாவது நாளை) பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (TET) நடைபெறுவதையொட்டி, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை நாளை புதுச்சேரியின் பெரும்பாலான ஆசிரியர்கள் எழுத இருக்கின்றனர். இதனால், நவம்பர் 15ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15ஆம் தேதிக்கு பதிலாக அடுத்தாண்டு ஜனவரி 3ஆம் ஆண்டு பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Puducherry TET Exam: லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்
புதுச்சேரி அரசின் கீழ் இயங்கும் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தால் புதுச்சேரி TET தேர்வு நடத்தப்படுகிறது. இது புதுச்சேரியின் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கற்பிக்கவும், தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு தகுதிச் சான்றிதழ்களை வழங்குவதற்காகவும் நடத்தப்படும் மாநில அளவிலான நுழைவுத் தேர்வு எனலாம்.
1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் பாடம் நடத்தக்கூடிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஆசிரியராக பணியாற்ற இயலும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் டெட் கட்டாயம் ஆகும்.
அதன்படி, நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. நாளை தாள்-1 தேர்வும், நாளை மறுதினம் தாள்-2 தேர்வும் நடத்தப்பட உள்ளது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் தாள்-1 தேர்வும், 6 முதல் 8ம் வகுப்பு வரையில் ஆசிரியர்கள் தாள்-2 தேர்விலும் பங்கேற்பார்கள். அந்த வகையில், தாள்-1 தேர்வுக்காக 1 லட்சத்து 7 ஆயிரத்து 370 பேரும், தாள்-2 தேர்வுக்காக 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 பேரும் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மாதம் ரூ.18,000 சம்பளம்.. பெண்களுக்கு சூப்பர் சான்ஸ் - உடனே அப்ளை பண்ணுங்க
மேலும் படிக்க | கிளாம்பாக்கம் போகவே வேண்டாம்... பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் கொடுத்த தமிழக அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









