School Holidays in Tamil Nadu: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று அக்டோபர் 15ம் தேதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. காலை முதல் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை நீடித்த போதிலும், விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகவில்லை.
கனமழை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், நிலைமையின் தீவிரத்தை பொறுத்து நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து இந்த முடிவு எடுக்கப்படும். ஆனால், தற்போது வரை இன்று எந்த மாவட்டத்திலும் விடுமுறை அறிவிக்கப்படாததால், பெற்றோர்களும் மாணவர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க: மகளிர் உரிமை தொகை வாங்கினால் ரூ.5000 தீபாவளி பரிசு கிடைக்குமா?

கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை எப்படி இருக்கும்?
சென்னையை பொறுத்தவரை, நாள் முழுவதும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சுமார் 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகக்கூடும். காலை முதல் பெய்து வரும் மழையால், பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
வானிலை மோசமாக இருப்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கடுமையாக எச்சரித்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் தென் கடற்கரை பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, கேரளாவின் கடலோர பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது வரை விடுமுறை அறிவிக்கப்படாததால், மாணவர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர். ஒருவேளை மழையின் தீவிரம் அதிகரித்தால், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை குறித்து முடிவெடுத்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களுக்காகப்பெற்றோர்களும், மாணவர்களும் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க: கோவை டூ குமரி.. 12 மாவட்டங்களில் நாளை வெளுக்கப்போகும் கனமழை.. உஷார் மக்களே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









