இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நாணய கண்காட்சி

பழனியில் நடைபெற்ற இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான நாணயக் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 27, 2022, 02:31 PM IST
  • பழனியில் நடைபெற்ற நாணயக் கண்காட்சி
  • பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்டோர் பங்கேற்பு
  • பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்
இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நாணய கண்காட்சி title=

பாரம்பரியத்துக்கு பெயர் பெற்ற தமிழகத்தில் இன்றளவும் பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை கீழடியில் ஒரு நகரமே கண்டுபிடிக்கப்பட்டு, பல்வேறு அரிய சிற்பங்கள், சுடுமண் பொருட்கள் மற்றும் பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சில பழங்கால நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன. ஆதிச்சநல்லூரிலும் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அங்கு பழங்கால தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
 

மேலும் படிக்க | மீனவ பெண் கொலை ; சம்பவ இடத்தில் கைதானவர்கள் காட்டிய தடையங்கள்!

இதன்தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு பாரம்பரிய மிக்க இங்களில் மீண்டும் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தப்படுகிறது. கீழடி உள்ளிட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட பொருட்கள் உடனடியாக மக்களின் பார்வைக்கும் காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்நிலையில், பழனியில் தேசிய அளவிலான பழைய நாணயம் மற்றும் அஞ்சல்தலை வரலாற்று கல்வி கண்காட்சி நடைபெற்றது. 

இந்தக் கண்காட்சியை பொள்ளாச்சி நாணய சங்கம், கோவை நாணய சங்கம் மற்றும் சேலம் நாணயச்சங்கம் ஆகியவை இணைந்து நடத்துக்கின்றனர். மூன்று நாட்கள்‌ தொடர்ந்து நடைபெறும் நாணயக் கண்காட்சியில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கால நாணயங்கள், முகலாய அரசர்களின் நாணயங்கள், பிரிட்டீஷ் அரசு நாணயங்கள், விக்டோரிய காலத்து நாணயங்கள், சுதந்திர இந்தியாவின் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் வரை இடம்பெற்றுள்ளன. 

மேலும் படிக்க | பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி: தேவகவுடாவும் சந்திரசேகர் ராவும்

நாணயக் கண்காட்சியில் தமிழகம் முழுவதுமுள்ள நாணய சேகரிப்பாளர்கள் தங்களது நாணயங்களை காட்சிப்படுத்தினர். மேலும் பழங்கால பொருட்கள், அணிகலன்கள் மற்றும் பானை ஓடுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாணயக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்த்து செல்கின்றனர்.நாணய கண்காட்சி குறித்து பேசிய மாணவர்கள், இந்தக் கண்காட்சியில் இடம்பெற்ற நாணயங்கள் மூலம் தமிழர்களின் வரலாறு மற்றும் வணிகம் சார்ந்த அரிய தகவல்களை தெரிந்து கொண்டதாக கூறினர். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News