தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை இன்று வியாழக்கிழமை தொடங்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து முழுமையாக விலகும் நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா மற்றும் தெற்கு கடலோர ஆந்திர பிரதேசம் ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழைக்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளது. மேலும், கடலோர தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த மூன்று நாட்களுக்குத் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Diwali Holiday: 3 நாட்கள் இல்லை! தீபாவளிக்கு மொத்தம் 6 நாள் பள்ளிகள் விடுமுறை!
இன்று மழை எங்கெங்கே?
இன்றைய தினம் நான்கு மாவட்டங்களில் மிக கனமழையும், 22 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை தொடரும் மழை
நாளை வெள்ளிக்கிழமையும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு நீடிக்கிறது. சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
- நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை
- 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
- தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
- நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
- தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக அறிவிப்பு
- கனமழை காரணமாக விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
இதற்கிடையே, வரும் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 19 தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரளா-கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் நகர்வுகள் அடுத்த சில நாட்களில் கண்காணிக்கப்படும். சென்னையை பொறுத்தவரை, கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வரும் நிலையில், பருவமழை தொடங்கியுள்ளதால் மழையின் தீவிரம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | கரூர் சம்பவம்: அமைச்சர் சொன்ன ஒரே வார்த்தை - டென்ஷன் ஆன இபிஎஸ் - அதிமுக அமளி ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









