அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய எஸ்டிபிஐ கட்சி - 10 முக்கிய காரணங்கள்..!!

SDPI, AIADMK Alliance: அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய எஸ்டிபிஐ கட்சி, அக்கூட்டணியில் இருந்து விலகியதற்கான 10 முக்கிய காரணங்களையும் தெரிவித்துள்ளது.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 19, 2025, 10:08 AM IST
  • அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்
  • எஸ்டிபிஐ கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
  • பாஜகவை விட்டு அதிமுக விலக வேண்டும் என கோரிக்கை
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய எஸ்டிபிஐ கட்சி - 10 முக்கிய காரணங்கள்..!!

SDPI Withdraws from AIADMK Alliance: எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளன. தேர்தலுக்கு சுமார் ஒரு வருடம் இருக்கும் நிலையில் அண்மையில் சென்னை வந்த அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசி அவசர அவசரமாக இந்த கூட்டணியை அறிவித்தார். தேர்தல் நேரத்தில் எத்தனை தொகுதிகளில் இரு கட்சிகளும் போட்டியிடுவது முடிவாகும் என இரு கட்சிகளும் அறிவித்துள்ளன. இருப்பினும் அதிமுகவில் இருக்கும் சில மூத்த நிர்வாகிகளுக்கே இந்த கூட்டணி அறிவிப்பில் உடன்பாடு இல்லை என தகவல் வெளியாகும் நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த SDPI கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதற்கான காரணங்களை பட்டியலிட்டார். அவர் பேசும்போது, " பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்த எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது. பாஜகவை எதிர்க்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கிறது பாஜக கூட்டணிக் கட்சிகளை எஸ்டிபிஐ கட்சி அங்கீகரிக்காது. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பதே பாஜகவின் முழக்கமாக இருந்தது ஆனால் திராவிட கட்சி மேலே சவாரி செய்ய வந்திருக்கிறார்கள் இப்போது முழக்கம் எங்கே போனது?

அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க எவ்வளவு பெரிய நிர்ப்பந்தம் கொடுத்து நேரம் கொடுத்து எத்தனை வாய்ப்புகள் கொடுத்தார்கள் என்று அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரியும். பாஜகவுக்கு இது கைவந்த கலை, தனக்கு கட்டுப்பட்டுத்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள். நீதி நேர்மை நியாயம் அனைத்தையும் துறந்து சாணக்கிய தத்துவ  அடிப்படையில் எந்த எல்லைக்குப் போவார்கள், அந்த அடிப்படையில்  அதிமுகவை கபிலீகரம் செய்திருக்கிறார்கள்.

பாஜகவை பொறுத்த வரையில் தனக்குச் சாதகமாக வேண்டுமென்றால் யார் காலிலும் விழுவார்கள் தனக்குத் தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள் அதுதான் அவர்களின் நிலைப்பாடு. எங்கெல்லாம் பாஜக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருக்கிறதோ அங்கு இருக்கக்கூடிய மாநிலக் கட்சிகளுடன் அழிந்துபோனதாகத் தான் வரலாறு இருக்கிறது. அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. அந்த வழியில் தமிழ்நாடு ஒரு அரசியல் கட்சியை இழக்கப்போகிறது என்பது உண்மை. இந்த முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து கதவுகளையும் சாத்திவிட்டதால் வாசலில் படுத்துக் கிடந்தார்கள், எந்த வாசலாவது திறக்காதா, எந்த ஜன்னல் ஆவது திறக்காதா என பாஜக தவம் கிடந்தார்கள். இப்போது  நிர்ப்பந்தம் நெருக்கடியில் கூட்டணியை நோக்கி மிதந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து விடுவித்து, கட்சியையும் தொண்டர்களைப் பாதுகாக்க வேண்டும். பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும், விலக்கிவிட வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பாஜகவை வெறுக்கிறார்கள். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியில் வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். நாங்கள் நிச்சயமாக ஒரு கூட்டணிக் கட்சியில் இருப்போம், எந்த கட்சி என்பது குறித்து 9 மாதத்திற்குள் அறிவிக்கப்படும்" என கூறியுள்ளார். 

மேலும் படிங்க: அடுத்த 2 மணிக்கு நேரத்திற்கு மழை வெளுக்கும்.. எந்தெந்த மாவட்டம் தெரியுமா?

மேலும் படிங்க: தமிழ்நாட்டில் முதன்முதலாக வீடு தேடிச் செல்லும் ரேஷன் பொருட்கள்..! எங்கு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News