சீமானிடம் விசாரணை நிறைவு... 53 கேள்விகளுக்கும் பதில்... மனைவி கயல்விழி வராதது ஏன்?

Seeman Latest News: வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகி இருக்கும் நிலையில் அவர் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 28, 2025, 11:25 PM IST
  • சீமான் இரவு 10 மணிக்கு ஆஜரானார்.
  • 53 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாக தகவல்.
  • இரவு 11.15 மணிக்கு விசாரணை நிறைவடைந்தது.
சீமானிடம் விசாரணை நிறைவு... 53 கேள்விகளுக்கும் பதில்... மனைவி கயல்விழி வராதது ஏன்?

Seeman Latest News: வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகி இருக்கும் நிலையில் அவர் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகி இருக்கும் நிலையில் அவர் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் சீமான், இன்று இரவு 7.50 மணிக்கு வடபழனி சொகுசு விடுதியில் இருந்து வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு புறப்பட்டார்.

Add Zee News as a Preferred Source

Seeman Latest News: மனைவி கயல்விழி வராதது ஏன்?

தொடர்ந்து, அவர் இரவு 8 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவார் என கூறப்பட்ட நிலையில், சீமான் வடபழனியில் மனைவி கயல்விழியின் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருந்தார். சீமானின் மனைவி கயல்விழி நீலாங்கரை இல்லத்தில் இருந்து வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. மேலும், கயல்விழி வழக்கறிஞர் என்பதால் சீமானுடன் அவர் காவல்நிலையம் செல்வார் என்பதற்காக சீமான் காத்திருந்ததாக கூறப்பட்டது.

அதன்பின், காவல்நிலையத்தில் விசாரணை நள்ளிரவு வரை நடைபெறலாம் என்பதால் மனைவி கயல்விழியை சீமான் வர வேண்டாம் என கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்தன. சீமான் இன்று கைது செய்யப்படலாம் என்பதாலும் அவரது மனைவி கயல்விழி அங்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, வடபழனியில் இருந்து வளசரவாக்கம் காவல்நிலையம் நோக்கி புறப்பட்டு, இரவு 10 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்தடைந்தார்.

Seeman Latest News: சீமானிடம் கேட்கப்பட்ட 53 கேள்விகள்

முதலில், வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் சாலையில் சீமானின் கார் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. மற்ற கார்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், நாதக தொண்டர்களும் நிர்வாகிகளும் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாதகவின் சாட்டை துரைமுருகன் மற்றும் வீரப்பன் மகள் வித்யாராணி ஆகியோருக்கு அனுமதியளிக்கவில்லை என்பதால் அவர்களும் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தற்போது சீமான் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜரானாதை தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில நாள்களுக்கு முன் பாதிக்கப்பட்ட நடிகையிடம் சுமார் 6 மணிநேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நடிகை விசாரணையில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் சீமானிடம் போலீசார் 53 கேள்விகளை விசாரணையில் எழுப்புவார்கள். இந்த கேள்விகளுக்கு சீமான் எழுத்துப்பூர்வமாக பதிலளிப்பார் என கூறப்படுகிறது.

Seeman Latest News: குறுக்கு விசாரணை

சீமானிடம் காவல் இணை ஆணையர் அதிவீரபாண்டியன் தலைமையில், உதவி ஆணையர் செம்பேடு பாபு, வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் அன்புக்கரசு உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 53 கேள்விகள் மட்டுமின்றி, அவர் முதல் சம்மனுக்கு ஆஜராகாதது, இரண்டாவது சம்மனை கொடுத்தபோது அதனை கிழித்தது, அதனை தொடர்ந்து நடந்த கைக்கலப்பு, இன்று தாமதாக ஆஜரானது ஆகியவை குறித்தும் கேள்விகள் எழுப்பப்படும் என கூறப்படுகிறது. குறுக்கு விசாரணையும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

Seeman Latest News: சீமானிடம் விசாரணை நிறைவு

இரவு 10 மணியளவில் சீமானிடம் விசாரணை தொடங்கிய நிலையில், இரவு 11.15 மணியளவில் விசாரணை நிறைவடைந்தது. சுமார் 1.15 மணிநேரம் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் இன்று கைது செய்யப்படவில்லை. விசாரணை முடிந்து அவர் வீடு திரும்ப உள்ளார். விசாரணைக்கு பின்னர் சீமான் தரப்பிலும், போலீசார் தரப்பிலும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Seeman Latest News: சீமான் வழக்கு முழு பின்னணி இதோ

பிரபல நடிகை ஒருவர், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி உறவு வைத்துக்கொண்டு அதன்பின் தன்னை ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2011ஆம் ஆண்டில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின் 2012இல் அந்த நடிகை அந்த புகாரை திரும்பப் பெற்றுக்கொண்டாலும் மீண்டும் 2023இல் அவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மேலும் அப்போதே சீமானிடம் 3 மணிநேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்னரும், அந்த நடிகை புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

இருப்பினும், இந்த வழக்கை ரத்து செய்யும்படி சீமான் தரப்பில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் 12 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது.

Seeman Latest News: இரண்டு முறை சம்மன்

இதையடுத்து, பிப். 27ஆம் தேதி சென்னை வளசரவாக்கம் காவல்துறையில் ஆஜராகும்படி சீமானுக்கு காவல்துறை சம்மன் கொடுத்திருந்தது. அவர் கிருஷ்ணகிரியில் கட்சி வேலையாக இருப்பதால் ஆஜராக இயலாது என சீமான் வழக்கறிஞர்கள் காவல்துறையிடம் தெரிவித்தனர். இதையடுத்து, பிப். 28ஆம் தேதியான இன்று காலை 11 மணியளவில் ஆஜராகும்படி அவருக்கு 2வது முறையாக சம்மன் வழங்கப்பட்டு, அவரது நீலாங்கரை வீட்டின் கதவில் சம்மன் ஒட்டப்பட்டது.

அந்த சம்மனை சீமான் வீட்டில் இருந்த ஒருவர் கிழித்ததை அடுத்து, போலீசார் அதுகுறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சீமான் வீட்டில் காவலாளியாக இருக்கும் முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜ் என்பவர் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜ் மற்றும் காவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அமல்ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இன்று தர்மபுரியில் இருந்து சேலம் சென்று, சேலத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை சீமான் சென்னை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News