Seeman Pressmeet Today : நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் வழக்கு விசாரணையை நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு காவல்துறை தொடங்கியுள்ளது. இந்த வழக்கு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சென்னை வளசரவாக்கம் காவல்துறை நேற்று சீமான் வீட்டில் சம்மனை வீட்டுக் கதவில் ஒட்டினர். இதனைத் தொடர்ந்து அந்த சம்மனை கிழித்த புகாரில் சீமான் வீட்டு காவலாளி மற்றும் ஓட்டுநர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து தருமபுரியில் சீமான் செய்தியாளர் சந்திப்பில் சர்ச்சையாக பேசினார். பெண்களை அருகில் அமர வைத்துக் கொண்டு அவர் பேசிய பேச்சுக்கள் முகம் சுழிக்கும் வகையில் இருந்தது.
தருமபுரியில் நாம் தமிழர் கட்சியினரின் கலந்தாய்வுக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், " இது ஒரே வழக்கு, ஏற்கனவே காவல்துறையிடம் விளக்கம் அளித்துள்ளேன். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு மூன்று மாதம் காலம் அவகாசம் கொடுத்திருக்கு. அதற்குள் இவ்வளவு அவசரம் ஏன் காட்டுகிறார்கள். பெங்களூருக்கு சென்று நடிகையிடம் விசாரிக்கும் காவல்துறை, என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு வா வா என்கிறீர்கள். ஓசூரில் இருக்கிற என்னிடம் வந்து விசாரிக்க முடியாதா?.
நான் எங்காவது தலைமறைவாகிவிட்டேனா?. வீட்டு கதவில் ஒட்டிவிட்டீர்கள். அதோட காவல்துறையோட வேலை முடிஞ்சுபோச்சு. அந்த சம்மனை கிழிக்கிறேன் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அந்த சம்மனை கிழிக்காமல், பூஜையறையில் வைத்து பூசையா போட முடியும். எதுக்கு இவ்வளவு பதட்டம் அடைகிறீர்கள். எங்க வீட்டில் இருப்பவர்களை ஏன் அடிக்கிறீர்கள்?, நான் ஏற்கனவே இந்த வழக்கில் நேரில் விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறேன். சம்மனை எனக்கு தானே கொடுக்க வந்தீர்கள். வீட்டுக் கதவில் ஒட்டினால் கதவா விசாரணைக்கு வரும்?.
எங்கள் வீட்டில் கைது செய்தவர்களை நேரடியாக ஸ்டேஷனுக்கு கூட்டி போகாமல் வேறு எங்கையோ கூட்டிட்டுபோய் அடித்து இருக்கிறார்கள். அதன்பிறகு அவர்களும் மருத்துவமனைக்கு சென்று படுத்துக்கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப்பிலேயே எனக்கு சம்மன் அனுப்பியிருக்கலாம். ஆனால் எங்கள் வீட்டுக்கு நீலாங்கரை காவல்துறை ஏன் சென்றது. நீங்கள் வீட்டில் சம்மன் ஒட்டிய தகவல் எனக்கு வந்துவிட்டது. அதன்பிறகு காவல்துறை என் வீட்டுக்கு செல்ல வேண்டிய தேவை என்ன?.
இந்த வழக்கில் விசாரிச்சு உடனே நீதி நிலைநாட்ட ஆர்வம் காட்டுவது ஏன். மத்த வழக்குகளில் எல்லாம் நீதி நிலையாட்டியாச்சா?. இது முதலில் என்ன வழக்கு?.. பாலியல் வழக்கு பாலியல் வழக்குன்னு சொல்லிட்டு இருக்காங்க. அந்த பொம்பளை யாரு...அவங்க சொன்ன குற்றமாகிடுமா?. வயசுக்கு வந்து குச்சுல உட்காந்துட்டு இருக்குற புள்ளைய, தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வச்சி குண்டுகட்டா கற்பழிச்சு விட்டமாதிரி எல்லாரும் கதறிட்டு இருக்கீங்க. என் கூட மோதி ஜெயிக்க முடியல. என்னைய பார்த்து நீ நடுங்கிட்ட, சமாளிக்க முடியல. என்ன செய்யனு தெரியாம, அப்பப்போ ஒரு பொம்பளைய கொண்டுவந்து முன்னாடி நிறுத்துறீங்க.
எனக்கு வசதியான நேரத்தில் தான் காவல்துறையிடம் விசாரணைக்கு ஆஜராவேன். காவல்துறை ரொம்ப விரும்புறதால, இன்னைக்கு செல்வேன், போவேன்." என கூறினார். 2 நாட்களுக்கு முன்புகூட பேரம் பேசியதாகவும், 2 கோடி ரூபாய் வரை கொடுக்க தயாராக இருப்பதாகவும் உங்கள் தரப்பில் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறதே என்ற கேள்விக்கு, அவங்க தரப்பில் தான் அழைத்தார்கள்... பின்னர் அவர்கள் தொடர்பு எல்லைக்குள் வரவில்லை என சீமான் விளக்கமளித்தார். மேலும், திருமணமானதாக கூறினார்கள், 7 முறை கருக்கலைப்பு செய்ததாக கூறினார்கள்.. அப்படி பார்த்தால் ஓர் ஆண்டில் 7 முறை கருக்கலைப்பு செய்த சாதனையாளன் நானாக தான் இருக்க முடியும் என அருவறுக்கதகையில் சீமான் பேசினார். மேலும், விஜயலட்சுமி பண உதவி கேட்டபோது தம்பிகள் கொடுத்திருப்பார்கள் என கூறிய சீமான், அந்த நடிகையுடன் திருமணம் ஆனதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டியததானே என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க | என்னால ஆஜராக முடியாது...? உங்களால என்ன செய்ய முடியும்...? சீமான் பகீர் பேட்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









