Seeman Criticizes TVK Vijay: அஜித் வந்தார் என்றால் இதை விட கூட்டம் வரும் என்று தவெக விஜய்யின் பிரச்சார பயணம் குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

Seeman Criticizes TVK Vijay: கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செப். 14) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நடிகர் விஜய் பரப்புரைக்கு கூட்டம் வரத்தான் செய்யும். இதுவரை திரையில் பார்த்தவர்களை நேரில் திரும்ப வரும்போது பார்ப்பதற்க்கு வருவார்கள்.
நாங்கள் சிறு பிள்ளையாக இருக்கும் போது எம்ஜிஆர், சிவாஜி வருகிறார்கள் என்று நின்ற காலம் உண்டு. கடைசியாக அவர்கள் வரவில்லை என ஏமாந்ததும் உண்டு. சகோதரர் அஜித் வந்தார் என்றால் இதை விட கூட்டம் வரும். ரஜினி மற்றும் நயன்தாரா வந்தால் இதை விட இரண்டு மடங்கு கூட்டம் வரும். கூட்டத்தை பார்க்காதீர்கள் முன் வைக்கும் கொள்கையை பாருங்கள். மக்களுக்காக பாடுபடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி" என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "நாங்கள் முதலில் மலைகளின் மாநாடு நடத்த உள்ளோம். நம் இயற்கையை அழிக்கிறார்கள், பூமி அழிகிறது. இலங்கை, நேபாளம் ஆகிய இடங்களில் வந்தது உங்களுக்கு வராதா?. ஸ்டீபன் ஹாகிங் கூட பூமி அழியப்படுவதை குறிப்பிட்டுள்ளார். நீங்கள் காசை சேர்த்து வைக்க பார்க்கிறீர்கள், நான் சுவாசத்தை சேர்த்து வைக்க கூறுகிறேன். என் தாயின் மார்பு போன்று பூமி தாயின் மார்பு மலைகள். விமான நிலையத்தை விரிவாக்கம் செய்கிறார்கள் பிறகு பசிக்கிறது என்று விவசாயம் செய்ய விமான நிலையத்தை இடிக்க முடியுமா?" என்றார்.
இளையராஜாவுக்கு தமிழக அரசு பாராட்டு விழா நடத்தியது குறித்து பேசுகையில், "கிரிக்கெட் வீரருக்கு தரும் மரியாதையை சிதம்பரனார், பாரதி ஆகியோருக்கு தரவில்லை. இளையராஜாவை இசை இறைவனாக பார்க்கிறோம். அவர் பெயரில் விருது வழங்குவது பெருமைதான். எனது அப்பா இளையராஜாக்கு திராவிட கட்சிகள் இதுவரை என்ன செய்தீர்கள். தற்போது பாஜக எம்பி சீட்டு வழங்குகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பெற்றோர்கள் இல்லாத குழந்தைக்கு மாதம் 2000 ரூபாய் கொடுக்கிறார்கள். குடிக்க வைத்து கொன்றதால் பெற்றோர் இல்லாமல் போனார்கள். பல்வேறு மனுக்கள் வாங்கினால் ஒரு லட்சம் பிரச்சனைகளை நாட்டு மக்களுக்கு கொடுத்துள்ளீர்களா இல்லையா?. காவிரி நதி நீர், மருத்துவ உரிமை, மாநில உரிமையை பறித்தது காங்கிரஸ், அதனை வளர்த்தது பாஜக. சாராய கடைகள் மூடுவேன் என்று இந்த அரசால் கூற முடியுமா?. காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுகவை தாண்டி நாட்டிற்கு பாதிப்பு வந்துள்ளதா? இவர்களுடன் நான் கூட்டணி வைக்க வேண்டுமா?. மூன்றாவது உலகப் போரை செய்தவர் பிரபாகரன். இனி வந்தால் அது நான்காவது உலகப் போர். என்னைவிட அதிகாரத்தில் உள்ளவர்கள் யார்...? நீங்கள் ஓட்டுபோட்டால் நான் அதிகாரத்திற்கு வருவேன். அதிகாரத்திற்கு வந்தவன் தீமை செய்கிறான், நான் நன்மை செய்வேன்" என்றார்.
பிரதமர் மோடியின் மணிப்பூர் சுற்றுப்பயணம் குறித்து பேசுகையில், "போகவேண்டும் என நினைத்திருப்பார் போனார். மணிப்பூர் பற்றி எரியும் போது செல்லவில்லை. இன்று அங்கு போராட்டம் இல்லை, செல்கிறார். ஆபரேசன் சிந்தூர் போன்று ஆப்ரேசன் இந்தூர் என்று ஒன்று போடவேண்டியது தானே..." என்றார். 2026ல் என் கையில் தான் ஆட்டம் உள்ளது. விஜய்யிடம் இவ்வளவு நேரம் கேள்வி கேட்க முடியுமா?. விஜய் செய்தியாளர் சந்திப்பு நடத்தவில்லை. ஆனால் நேராக கோட்டைக்கு செல்ல நினைக்கிறார்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ