)
மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் 224வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்து அவர் பேசினார்.
அப்போது, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அரசியல் தலைவர் விஜயை பார்க்க செல்கிறார்கள். இந்த அரசியலை எப்படி பார்க்கிறீர்கள்? தம்பி விஜய் அவர்களே குறிப்பிட்டுள்ளார் வரலாறு திரும்புகிறது என்று, முத்துராமலிங்க தேவர், மூக்கையா தேவர், கக்கன், காமராஜர் உள்ளிட்ட பெரும் அறிஞர்கள் ஆட்சி செய்த மண். நல்லாட்சி மலர வேண்டும் என போராடிக் கொண்டிருக்கும்போது, இது வேற பக்கம் திசை திரும்பி செல்கிறது. கல்வி அரசியலை கற்பிக்கவில்லை.. ஒழுக்கம் நெறிமுறைகளை கற்று தரும் கல்வியாக இல்லாமல், வியாபாரமாக மாறிவிட்டது.
கலையை போற்ற வேண்டியது தான் கலைஞர்களை பாராட்ட வேண்டியதுதான். நடித்தால் மட்டுமே நாடாளலாம் என்ற தகுதிகள் வந்துவிடும் என்ற நாட்டு மக்கள் எண்ணுகிறார்களோ அதுதான் கொடுமையான போக்கு. போகப் போக ஒரு சமூகம் வளர்ந்து வாழும் என்று தான் பார்க்கிறோம். ஒப்பனையை அளித்த உடனே அரியணை நீங்கள் நடிக்கும் போதும் நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு நடிப்பேன் நிறுத்தினால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு இந்த நிலைப்பாட்டை தமிழ் சமூகம் ஏற்ப்கிறதா..?
இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் நடிப்பு இருக்கிறது இந்த திரை கவர்ச்சியில் மூழ்கி இருக்கும் தமிழ் இனம் விழிப்புற்று எழவேண்டும். தோற்றுப்போன சமூகத்தில் தேவையற்ற செய்திகளை தலைப்புச் செய்திகளாக மாற்ற வேண்டாம்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிக் கொண்டிருந்தபோது அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் சிலைக்கு மாலை அணிவதற்காக வருகை தந்த நிலையில் காவல்துறையினர் செய்தியாளர் சந்திப்பை முடிக்குமாறு அறிவுறுத்தினர். அதற்கு சீமான் ஒரு நிமிடம் பொறுங்கள், நீங்கள் பேசும் நேரத்தில் முடித்து விடுவேன் என கூறியும் காவல்துறையினர் மாறி மாறி பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் சில நிமிடத்திலேயே பேட்டியை முடித்துவிட்டு சிவகங்கை புறப்பட்டு சென்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ