)
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் செஞ்சி கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆக்ரோஷமாக மேடையிலிருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட தொடர் குழப்பங்களால், கோபத்தின் உச்சிக்கு சென்ற சீமான், யாரும் எதிர்பாராத வகையில் இந்த செயலில் ஈடுபட்டார். இந்த நிகழ்வு, தமிழக அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், செஞ்சி கோட்டையை மராட்டிய மன்னன் கட்டியதாக யுனெஸ்கோ, உலக பாரம்பரிய சின்னமா அங்கீகரித்துள்ளது. ஆனால் செஞ்சி கோட்டையை தமிழர் கோனேரிக்கோன் மன்னன் தான் கட்டினார் என்று நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய சீமான், வழக்கம் போல ஆவேசமாக உரையாற்றி கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தின் ஒரு பகுதியில் சிலர் தொடர்ந்து கூச்சலிட்டும், கோஷங்கள் எழுப்பியும் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. அவர்களை அமைதியாக இருக்குமாறு கட்சி நிர்வாகிகள் பலமுறை எச்சரித்தும், குழப்பம் நீடித்தது. இதனால் தனது பேச்சின் ஓட்டம் தடைபட்டதால், சீமான் அதிருப்தி அடைந்தார்.
முதலில் பொறுமையாக பேசிப் பார்த்த சீமான், ஒரு கட்டத்தில் தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், திடீரென மேடையின் முன்பகுதிக்கு சென்று அங்கிருந்து கீழே பாய்ந்து குதித்தார். சீமானின் இந்த திடீர் செயலால் மேடையில் இருந்த கட்சி நிர்வாகிகளும், கூட்டத்தில் இருந்த தொண்டர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை சூழ்ந்துகொண்ட கட்சி தொண்டர்கள் மற்றும் பாதுகாவலர்கள், அவரை பத்திரமாக மீட்டனர். தொண்டர்கள் சிலர், குழப்பம் ஏற்படுத்தியவர்களை தாக்க முற்பட்டதால், கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மூத்த நிர்வாகிகள், உடனடியாக தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
இந்த சம்பவம், எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் கூட்டத்தில் குழப்பம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் அக்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். பொதுக்கூட்ட மேடையில் ஒரு கட்சியின் தலைவர் இவ்வாறு கோபத்தில் குதிப்பது இதுவே முதல் முறை என்பதால், இந்த நிகழ்வின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பல்வேறு விதமான விமர்சனங்களையும், விவாதங்களையும் உண்டாக்கியுள்ளது. இந்த சம்பவம், வரவிருக்கும் தேர்தல்களில் கட்சியின் செல்வாக்கில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கூட்டத்தை அமைதியாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது, கட்சியின் கட்டுப்பாட்டில் குறைபாடுகள் உள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ