தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டை கடந்த ஆண்டு விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடத்தினார். அப்போதில் இருந்தே தனது முதல் எதிரி திமுக - தான் என கர்ஜித்து வருகிறார். இந்த சூழலில், தவெக-வின் மாநாடு ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற்றது. விக்கிரவாண்டி மாநாட்டில் பாஜக மற்றும் திமுகவை தாக்கி பேசிய விஜய் இந்த மாநாட்டில் என்ன பேசப்போகிறார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால் விஜய், இம்முறை திமுக மற்றும் பாஜகவை மட்டுமே குறிவைத்து விமர்சித்தார். குறிப்பாக திமுக-வின் தலைவரும் தமிழக முதமலைச்சருமான மு.க. ஸ்டாலினை Uncle Uncle என கூறி கிண்டல் செய்யும் வகையில் பேசினார். இது திமுக மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. பலரும் விஜய்யின் இந்த பேச்சுக்கு தங்களது பதிலடியை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், விஜய்யின் பேச்சு குறித்த கேள்விக்கு சீமான் பதிலளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஆகஸ்ட் 27) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் விஜய்யின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான், அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது, JUNGLE JUNGLE என்று தானே கத்த வேண்டும். கடந்த மாநாட்டில் CM-சாராக இருந்தவர், இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக எப்படி மாறினார் என கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டு காலம் முதமலைச்சராக இருந்தபோது, அதிமுக இருந்தது என விஜய் ஏன் கேட்கவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், திருச்சியில் பிப்ரவரி 7ஆம் தேதி நாம் தமிழர் கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. மாநாடு என்றால் எப்படி நடத்த வேண்டும்? என்பதை பிப்ரவரி 7ஆம் தேதி திருச்சியில் நாங்கள் நடத்தும் மாநாட்டை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். அதில் எத்தனை லட்சம் பேர் கூடுகிறார்கள் என பாருங்கள். ஒரு மாநாட்டு உரை என்பது எப்படி இருக்கும் என்பதை அப்போது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என நாம் தமிழர் கட்சி சீமான் கூறினார்.
முன்னதாக தவெக மாநாட்டில் விஜய் அதிமுக குறித்து பேசியதாவது, எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அந்த கட்சியை, கட்டிக்காக்கிறது யார்? அந்த கட்சி இப்போது எப்படி இருக்கிறது? நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனும் என்ற அவசியம் இல்லை. அப்பாவி தொண்டர்கள் வேதனையை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். பொருந்தாக் கூட்டணியாக அதிமுக - பாஜக கூட்டணி உள்ளது என பேசி இருந்தார்.
மேலும் படிக்க: பழைய ஓய்வூதிய திட்டம்: அமல்படுத்த என்ஜிஓ சங்கம் புதிய யோசனை!
மேலும் படிக்க: நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









