Mayiladuthurai Collector Controversial Speech: சீர்காழியில் அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி, 16 வயது சிறார் குற்றவாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், அந்த குழந்தையே தவறாக நடந்துகொண்டுள்ளது என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Mayiladuthurai News: போக்சா சட்டம் குறித்து போலீசாருக்கு அறிவுரை
மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் இன்று (பிப். 28) நடைபெற்றது.
இதில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கி பேசினர்.
Mayiladuthurai News: மயிலாடுதுறை ஆட்சியர் பேசியது என்ன?
அப்போது, சீர்காழியில் கடந்த பிப். 24ஆம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி 16 வயது சிறார் குற்றவாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தலை மற்றும் கண் சிதைக்கப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசினார். இந்த சம்பவத்தில் குழந்தையே தப்பாக நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு கிடைத்த ரிப்போர்ட்டின் படி, அந்த குழந்தை சிறுவனின் முகத்தில் துப்பியுள்ளது. அதுதான் காரணம்.
எனவே, இரண்டு தரப்பிலும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதுபோன்ற விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தருவது குறித்து பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும்" என சர்ச்சை ஏற்படுத்தும் விதத்தில் பேசினார். மூன்றரை வயது சிறுமி சிறுவனின் முகத்தில் துப்பியதுதான் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என மாவட்ட ஆட்சியர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Mayiladuthurai News: சீர்காழியில் நடந்தது என்ன?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மூன்றரை வயது பெண் குழந்தை அப்பகுதியில் உள்ள அங்கன்வாடிக்கு கடந்த பிப். 24ஆம் தேதி சென்றுள்ளது. உணவருந்தி விட்டு வெளியே வந்த குழந்தையை அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான 16 வயது சிறுவன் சாக்லேட் வாங்கி கொடுத்து தனியே அழைத்துச் சென்றுள்ளார்.
மறைவான இடத்திற்கு சென்ற பின்னர் குழந்தையிடம் தவறாக நடக்க முற்பட்டபோது குழந்தை சப்தமிட்டதால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் அருகே இருந்த கல்லால் குழந்தையின் தலையில் கொடூரமாக தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் குழந்தையின் தலையில் பலத்த காயமடைந்து ஒரு கண் சிதைந்த நிலையில் குழந்தை மயக்கமாகி உள்ளது.
Mayiladuthurai News: சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு
அங்கிருந்து சிறுவன் தப்பிச்சென்ற நிலையில் அங்கன்வாடி சென்ற குழந்தை வெகு நேரமாக வீடு திரும்பாததால் பெற்றோரும் உறவினர்களும் குழந்தையை தேட துவங்கியுள்ளனர். வெகுநேரம் தேடிய பின்னர் அங்கன்வாடிக்கு பின்புறம் உள்ள புதர் பகுதியில் குழந்தை தலையில் ரத்தக்காயத்துடன் மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது.
குழந்தையை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக குழந்தை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அந்த 16 வயது சிறுவனை கைது செய்த அனைத்து மகளிர் போலீசார் நீதிபதி முன்பு முன்னிலைப்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
மேலும் படிக்க | தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை - ஆர். என். ரவி பேச்சு!
மேலும் படிக்க | ரேஷன் பொருட்கள் எடை சரியாக இருக்கிறதா? அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மேலும் படிக்க | மொழிக்கு ஒரு ஊறு என்றால் உயிரைக் கொடுக்கும் கூட்டம்: திருச்சி சிவா பேச்சு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









