)
Sellur Raju Press Meet: திருமாவளவனுக்கு என்ன நெருக்கடி இருக்கிறது என்று தெரியவில்லை என்றும் விஜய் களத்திற்கு வந்து அரசியல் செய்ய வேண்டும், வெறும் இமேஜை வைத்து மட்டும் வெற்றி பெற முடியாது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறி உள்ளார்.
மதுரை கூடல் நகர் 2வது வார்டில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் கரிசல்குளம் கண்மாய் மறுகால் வாய்க்காலின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவரிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் ED ரெய்டு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது, அதில் பதில் அளித்த அவர், "திமுக-வில் இது புதிதல்ல. பல அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது" என்றார்.
திருமாவளவனுக்கு நெருக்கடி
திமுக கூட்டணி உடைக்க முயற்சிக்கிறார்கள் என திருமாவளவன் கருத்து குறித்த கேள்விக்கு, "திருமாவளவன் திசை தெரியாமல் காட்டுக்குள் சென்றுவிட்டார். அவருடைய தலைமை பண்பை விமர்சிக்க கூடிய அளவில் ஆகிவிட்டார். என் கையை பிடித்து பேசியவர் "அம்மா" என்று அம்மாவின் பண்பை பேசியவர் திருமாவளவன். அவருக்கு என்ன நெருக்கடி வந்துள்ளது என்று தெரியவில்லை. தலித் மக்களை பொதுத் தொகுதியில் நிறுத்திய அம்மாவை பற்றியெல்லாம் பேசி வருகிறார். அவர் இயக்கத்தை என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்றார்.
களத்திற்கு வராத விஜய்
தமிழக வெற்றிக் கழக மாநாடு மற்றும் விஜய் களத்தில் வந்தால் இடையூறு ஏற்படும் என த.வெ.க வினரின் கருத்துக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "விஜய் பனையூரில் இருந்து கொண்டு அரசியல் செய்வது விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. விஜய் களத்திற்கு வர வேண்டும். அனைவரும் களத்திற்கு வந்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
எங்கயோ நடக்கும் மாநாடு, செயற்குழுவில் பேசி கடைசி நேரத்தில் 'இமேஜை' வைத்து வெற்றி பெறலாம் என்று நினைத்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் வெளியில் வந்தால் இடையூறு ஏற்படும் என திரும்ப திரும்ப சொன்னால் எப்படி? விஜய் வெளியில் வந்து மக்களை சந்திக்க வேண்டும். எல்லாரும் எம்ஜிஆராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். எப்போதும் ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான். எடப்பாடி பழனிச்சாமி செல்லும் இடம் எல்லாம் மக்கள் வெள்ளமாக இருக்கிறது" என அவர் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ