முதலமைச்சரின் பெரியப்பாவுக்கே பாதுகாப்பு இல்லை - செல்லூர் ராஜு!

Sellur Raju : மதுரை அவனியாபுரத்தில் எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய நிலையில், முதலமைச்சரின் பெரியப்பாவுக்கே பாதுகாப்பு இல்லை என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Oct 7, 2025, 07:41 PM IST
முதலமைச்சரின் பெரியப்பாவுக்கே பாதுகாப்பு இல்லை - செல்லூர் ராஜு!

மதுரை அவனியாபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் சிலையை நேற்று முன் தினம் (அக்டோபர் 05) மர்ம நபர்கள் சிலர் கீழே தள்ளி சேதப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் சார்பில் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

Add Zee News as a Preferred Source

இந்த சூழலில் தாங்கள் அளித்த புகார் சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி இன்று (அக்டோபர் 07) திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் அவனியாபுரம் பகுதியில் காவல்துறையை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் தங்களது போராட்டத்தை தொடர்ந்ததால் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உட்பட அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

இந்த நிலையில் சாலை மறியல் போராட்டத்திற்காக கைது செய்யப்பட்ட எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவை பார்ப்பதற்காக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவனியாபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு வந்து அவரை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, இந்த சம்பவம் ஒரு சாதாரண விஷயம் கிடையாது. சம்பவத்தை கண்டித்து ஒரு தீக்குச்சியை உரசி போட்டது போல் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்துள்ளார். 

சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த ஆட்சியில் சமூக விரோதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சமூக விரோதிகளை கண்டு காவல்துறை பயப்படும் அளவிற்கு அவர்களின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை, இளைஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை, என்கிற நிலை தான் இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ளது. 

போதைப் பொருள் நடமாட்டம் கஞ்சா கிலோ கணக்கில் விற்கப்படுகிறது, அதையெல்லாம் தடுக்க 2.0 ஒன்று என்னென்னவோ ஓ போட்டு பார்த்தார்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை. இதே காவல்துறை எடப்பாடி கைக்கு வந்தால் இது எல்லாம் கட்டுப்படுத்தப்படும். எம்ஜிஆர் அனைவருக்கும் பிடித்தவர் முதல்வர் ஸ்டாலினுக்கு பெரியப்பா என்று சொல்கிறார். பெரியப்பா என்று சொல்லக்கூடிய எம்ஜிஆர் திமுக வை வளர்த்தெடுத்தவர்.

திமுக ஆட்சியிலேயே அவர்கள் சிலைக்கு பாதுகாப்பு இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஸ்டாலின் அவர்களே உங்கள் பெரியப்பாவுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இதை கொஞ்சம் கவனத்தில் வையுங்கள். காவல்துறையிடம் சொல்லி உடனடியாக நடவடிக்கை எடுங்கள் இல்லையென்றால் இன்றைக்கு மதுரையில் தொடங்கிய போராட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் நடைபெறும் என்றார்.தொடர்ந்து பேசிய அவர்  எம்ஜிஆர் சிலைக்கே பாதுகாப்பு இல்லை எடப்பாடி யாருக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்.சம்பவம் நடந்து 50 மணி நேரம் ஆகியும் காவல்துறை இன்னும் குற்றவாளிகளைகண்டுபிடிக்கவில்லை விரைந்து காவல்துறை கண்டுபிடிக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றார்.

மேலும் படிக்க: வெறும் 2708 உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதா? அன்புமணி கண்டனம்!

மேலும் படிக்க: அடுத்த மூன்று நாட்களுக்கு.. இந்த 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News