கலெக்டர் போல மேசேஜ் அனுப்பி அவரின் உதவியாளரிடமே 'பணம் பறிப்பு' - கைவரிசை காட்டிய 'வடமாநில கும்பல்' !!

சிவகங்கையில் ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி ரூ. 3 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Written by - Gowtham Natarajan | Last Updated : Jul 2, 2022, 11:44 AM IST
  • போலி செல்போன் கணக்கு மூலம் பணம் மோசடி
  • 30 முறை ரூ.10,000 அனுப்பி ஏமாற்றம் - ரூ3 லட்சம் ஏமாற்றம்
  • சைபர் கிரைம் விசாரணையில் வெளிவந்த உண்மை
கலெக்டர் போல மேசேஜ் அனுப்பி அவரின் உதவியாளரிடமே 'பணம் பறிப்பு' -  கைவரிசை காட்டிய 'வடமாநில கும்பல்' !! title=

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியின் விவசாயத்துறை நேரடி உதவியாளராக பணிபுரிந்து வருபவர் சர்மிளா. இவரது மொபைல் போனில் உள்ள வாட்சப் எண்ணிற்கு ஆட்சியர் மதுசூதன் ரெட்டி புகைப்படத்துடன் கூடிய போலி கணக்கில் இருந்து லிங்க் மூலம் 10 ஆயிரம் ரூபாய் அனுப்ப கோரி குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை உண்மை என நம்பிய உதவியாளர் சர்மிளா 10 ஆயிரம் ரூபாயை அந்த லிங்க் மூலம் அனுப்பியுள்ளார். இதேபோல் அடிக்கடி குறுஞ்செய்தி வரவே இவரும் 30 முறை 10 ஆயிரம் ரூபாய் என 3 லட்ச ரூபாய் வரை அனுப்பியிருக்கிறார்.

கலெக்டர் போல மேசேஜ் அனுப்பி,கலெக்டர் போல பேசி, பண மோசடி, பணம் மோசடி, வடமாநில கும்பல், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்

ஒரு கட்டத்தில் சந்தேகம் ஏற்பட்ட அவர் இது குறித்து ஆட்சியரின் அலுவலகத்தில் விசாரித்ததில் அது போலியான கணக்கு என்பது தெரியவந்தது. உடனடியாக சம்பவம் தொடர்பாக சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் செயல்பட்டுவரும் சைபர் கிரைம் போலிசாரிடம் புகார் அளித்துள்ளார். உடனடியாக வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் விசாரணையைத் துவங்கிய நிலையில் அந்த போலி செல்போன் கணக்கு பிஹார் மாநிலத்தில் இருந்து செயல்பட்டு வருவது தெரிய வந்தது.

மேலும் படிக்க | ஆளுநர் தமிழிசை கலந்துக்கொண்ட விழாவில் கைவரிசை காட்டிய சென்னை கும்பல்!

இதனையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் ஆட்சியரின் பெயரிலேயே போலி செல்போன் கணக்கு மூலம் பணம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி குண்டார் சக்திவேல் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News