செங்கோட்டையன் குறித்து கேபி முனுசாமி சொன்ன முக்கிய தகவல்!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவரது பணியை சரியாக செய்கிறார் என்றும், சைதை துரைசாமி அதிமுகவில் தொடர்பு இல்லாதவர் என்றும் கிருஷ்ணகிரியில் கேபி முனுசாமி பேட்டி அளித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Apr 5, 2025, 04:24 PM IST
  • செங்கோட்டையன் பணியை சரியாக செய்கிறார்.
  • சைதை துரைசாமி அதிமுகவில் தொடர்பு இல்லாதவர்.
  • கிருஷ்ணகிரியில் கேபி முனுசாமி பேட்டி.
செங்கோட்டையன் குறித்து கேபி முனுசாமி சொன்ன முக்கிய தகவல்!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுக துணை பொதுச் செயலாளர் கே பி முனுசாமி எம்எல்ஏ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை அதிமுக எதிர்த்து உள்ளோம், அந்த சட்டத்தில் இன்னும் முழுமையாக ஆய்வு செய்து இஸ்லாமியர்களுக்கு ஆதரவான விஷயங்களை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம்.

Add Zee News as a Preferred Source

அதிமுக -பாஜக கூட்டணி அமைக்க வேண்டும் என சைதை துரைசாமி பேசிய கருத்திற்கு அதிமுகவில் எதிர்ப்பு உள்ளது. இதை எதிர்ப்பவர்கள் உண்மையான அதிமுகவில் உழைப்பவர்கள், ஆனால் அதிமுகவில் ஏதோ ஒரு காலத்தில் பொறுப்புகள் வகித்த சைதை சாமி தற்போது பல்வேறு கட்சியில் தொடர்பில் உள்ளார். அவருக்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பு இல்லாதவர், அதனால் தான் சைதை துரைசாமியின் கருத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது.

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கடைசி நேரத்தில் வராமல் போகும் - இந்த தப்பை செஞ்சிடாதீங்க..!

முன்னாள் அமைச்சர், கழக முன்னோடி செங்கோட்டையன் அவரது பணியை சரியாக செய்கிறார், தேவை இல்லாமல் அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சந்தர்ப்பவாதிகள் முயற்சி செய்து வருகின்றனர், செங்கோட்டையன் டெல்லி சென்றார். நிதியமைச்சரை சந்தித்தது உண்மை தான். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கச்சதீவை குத்தகைக்கு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது அவருடைய சொந்த கருத்து இந்த விஷயத்தில் மத்திய மற்றும் இலங்கை அரசுகள் தான் முடிவெடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது தொகுதி மறு வரை குறித்தும், கச்சத்தீவு குறித்தும் கேள்வி எழவில்லை, திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு வகையில் தோல்வி அடைந்த காரணத்தினால் மக்களை ஏமாற்ற பல்வேறு தீர்மானங்களை கொண்டு வருகிறார். குறிப்பாக மத்திய அரசு மீது தாக்குதல் நடத்துகிறார். கச்சத்தீவை 1974 இல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அன்றைய பிரதமருடன் கூட்டு சேர்ந்து தீர்மானத்தை ஒத்தி வைத்தார், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருகிறார். நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என முதலமைச்சர் தெரிவித்தார். ஆனால் அவரால் செய்ய முடியவில்லை, இதனால் மக்களை ஏமாற்றவும் அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ள நிலையில் பாஜகவை எதிர்கிறார் கேள்வி கேட்க்கும் அதிமுகவுக்கு பதில் சொல்லு முடியாமல் முதலமைச்சர் ஏமாற்றுகிறார் என குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | பைபாஸில் பைக் ஸ்டண்டில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News