TVK Sengottaiyan: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய சுமார் 300க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று (டிசம்பர் 9) ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரான செங்கோட்டையன் கலந்து கொண்டு, மாற்றுக் கட்சியில் இருந்து தவெகவில் இணைந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு செங்கோட்டையன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
பின்னர் பேசிய அவர், "நான் இந்த இயக்கத்தில் (தவெக) இணைத்த போது, இளைஞர்களின் எழுச்சி நாயகன் அவர்தான் (விஜய்) என்றும், நாங்கள் அவருக்கு மட்டுமே வாக்களிப்போம் என்று இளைஞர்கள் தெரிவித்தனர். மேலும் உங்களை போன்ற இளைஞர்கள் தியாகத்தோடு இந்த இயக்கத்தை அர்ப்பணித்துக் கொண்டுள்ளீர்கள்.
நாம் அவருக்காக உறுதுணையாக நின்று எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்க வேண்டும். 2026ஆம் ஆண்டில் அவர் (விஜய்) முதலமைச்சராக வேண்டும் என்ற லட்சிய பயணங்களோடு செயல்பட வேண்டும். தற்போது சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இந்த இயக்கம் எங்கே இருக்கிறது? என்று... ஆனால் மூன்று ஆண்டுகளில் எம்ஜிஆர் முதலமைச்சராக பணியாற்றியவர், மக்களுக்கு சேவை செய்தவர். அதேபோல் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு தமிழகத்தை அமைதி பூங்காவாக உருவாக்க எழுச்சியோடு பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.
அவரை வெற்றி பெற செய்து வரலாற்றைப் படைப்போம். பாஜகவில் தற்போது தலைமையில் உள்ளவர் (நயினார் நாகேந்திரன்) எங்கே இருந்தார்? அவர் எங்கே சென்றார்? என்பது அனைவருக்கும் தெரியும். அவர் நிற்கும் தொகுதியில் அவர் நிச்சயம் டெபாசிட் இழப்பார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பத்திரிகையாளர்கள் சந்திக்கும்போது "இந்த இயக்கம் (தவெக) நாளை ஒரு வார்டில் கூட வெல்ல முடியாது எனக் கூறினார், ஆனால் இந்த இயக்கம் நாளை 234 சட்டமன்ற தொகுதிகள் வெற்றி பெறும்" செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார்.
வரும் டிசம்பர் 18ஆம் தேதி அன்று ஈரோட்டில் இருந்து தவெக தலைவர் விஜய் அவரது மக்கள் சந்திப்பு கூட்டத்தை மீண்டும் தொடங்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகின. அதற்கு போலீசாரிடம் இருந்து அனுமதி பெற செங்கோட்டையன் கடுமையாக முயற்சித்து வருகிறார். அதிமுகவின் கோட்டையாகவும், திமுக பலவீனமாகவும் கருதப்படும் கொங்கு மண்டலத்தை குறிவைத்து தவெக களமிறங்குகிறது என்றும் அதனால் ஈரோட்டில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. கரூர் சம்பவத்திற்கு பின் காஞ்சிபுரம், புதுச்சேரி நிகழ்ச்சிகளில் விஜய் பங்கேற்று உரையாற்றியிருந்தாலும், ஈரோடு களம் மிக மிக பரபரப்பானது என்பது ஐயமில்லை.
மேலும் படிக்க | புதுச்சேரியில் விஜய் பேச்சு - மக்களின் கருத்து என்ன?
மேலும் படிக்க | அதிமுகவில் இணைக்கப்படுவாரா ஓபிஎஸ்? பொதுக்குழு முடிவு என்ன?
மேலும் படிக்க | விஜய் ஈரோடு பொதுக்கூட்டத்தில் அதிரடி மாற்றம்! வெளியான முக்கிய தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









