)
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். வழக்கறிஞரான சுரேஷின் தந்தை ராஜேந்திரன் கடந்த 2024 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்நிலையில் திருமங்கலம் கிராமத்தில் சுரேஷ் தந்தை ராஜேந்திரன் மற்றும் அவருக்கு நிலம் விற்பனை செய்த ராயன் ஆகியோர் பெயரில் கூட்டு பட்டாவாக தாக்கல் ஆகியுள்ளது தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் படி ராஜனுக்கும், ராஜேந்திரன் ஆகிய இருவருக்கும் பட்டா இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் சுரேஷ் தந்தை ராஜேந்திரன் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது நேரடி வாரிசுகளான சின்ன பொண்ணு, சூர்யா, சுரேஷ், சுமித்ரா ஆகிய பெயர்களை பட்டாவில் சேர்க்குமாறு ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வழக்கறிஞர் சுரேஷ் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் தனது தந்தையின் பட்டாவில் தனது பெயரக் சேர்க்காமல் தொடர்ந்து நிராகரிப்பதாகவும் அவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் இது குறித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோரிடம் நேரில் புகார் அளித்த பிறகு செய்தியாளர்களை வழக்கறிஞர் சுரேஷ் சந்தித்தார்.
அப்போது வழக்கறிஞர் சுரேஷ், ‘எனது தந்தை பெயரிலுள்ள பட்டாவை தாசில்தார், ஆர்.டி.ஓ, டி.ஆர்.ஓ விசாரணை செய்து அதனை உறுதிபடுத்தியுள்ளனர். ஆனால் இது தொடர்பான வழக்கு வெற்றி பெற்ற பிறகும் எனது பெயரை பட்டாவில் சேர்த்து கொடுப்பதற்கு அதிகாரிகள் தயங்குகிறார்கள். பட்டா கொடுப்பதற்கு 5 லட்சம் 10 லட்சம் கொடுங்கள் என்றால் கொடுத்துவிட்டு வாங்கி தான் பொது மக்கள் போக வேண்டுமா ????
பட்டாவில் பெயர் சேர்க்க லட்சக்கணக்கில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள். தாசில்தார், துணை வட்டாட்சியர், விஏஓ லட்சக்கணக்கில் லஞ்சத்தை பெற்று கொண்டு பட்டாவில் பெயர் சேர்த்துள்ளனர். நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கில் தோற்றுபோன நபரிடம் லஞ்சத்தை பெற்றுக்கொண்டு அவரது பெயரை பட்டாவில் அதிகாரிகள் சேர்த்துள்ளது எவ்விதத்தில் நியாயம்?
நியாயமான முறையில் போராடி வரும் எனது பெயரை பட்டாவில் சேர்க்காமல் அதிகாரிகள் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கையை எடுத்து எனக்கான நியாயத்தை இந்த அரசாங்கம் பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்’ என்று தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ