)
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசினார். அப்போது, கூடிய கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். சிலர் வீடு திரும்பி உள்ளனர். சிலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுரை தமிழ்நாடு அரசியலில் நடக்காத ஒரு சம்பவமாக இச்சமப்வம் மாறியது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 10 லட்சம், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரூ. 20 லட்சம் மற்றும் பிரதமர் மோடி ரூ. 2 லட்சம் அறிவித்திருந்தார். இந்த சூழலில், கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்டத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன என தவெக சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
சம்பவத்திற்கு பின்னர் நேற்று (செப்டம்பர் 30) முதல் முறையாக வாய் திறந்த தவெக தலைவர் விஜய்யும் இதுவரை 4,5 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்திருக்கிறோம், எப்படி கரூரில் மட்டும் இப்படி ஒரு துயர சம்பவம் நிகழ்ந்தது என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து இச்சம்பவம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அவரிடம் கரூரில் மட்டும் இந்த சம்பவம் நடந்தது ஏன்? கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டது, ஆம்புலன்ஸ் குற்றச்சாட்டு தொடர்பான கேள்வி உள்ளிட்ட பல கேள்விகள் கேட்டகப்பட்டது. இதற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூரில் நடந்த சம்பவம் யாராலும் நினைத்து பார்க்காத ஒரு துயர சம்பவம். இனி இதுபோன்ற சம்பவம் எங்கேயும் நடைபெற கூடாது. இந்த சம்பவத்தை அரசியலாக பார்க்க விரும்பவில்லை. வரும் நாட்களில் இதுபோன்று நடக்க கூடாது.
கரூரில் மட்டும் ஏன் நடந்தது என குற்றம்சாட்டுகிறார். இது ஒருவர் தினமும் பைக்கில் செல்கிறேன் இன்று மட்டும் ஏன் விமத்து நடந்தது என்று கேட்பதுபோல் உள்ளது. சுமார் 25000 பேர் கூட்டத்திற்கு வந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு தண்ணீர் பாட்டில் அங்கு இருந்ததா? ஒரு பிஸ்கட் பாக்கெட் இருந்ததா? கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்கள்தான் மக்களை கவனித்து கொள்ள வேண்டும். அதேபோல், செருப்பு விசியது குறித்து பல தவறான தகவல்கள் பரவி வருகின்றன. என்னை குறித்து பேசுவதற்கு முன்பாகவே இது நடந்துள்ளது. இவ்வாறு கூறிய செந்தில் பாலாஜி, செருப்பு வீசிய நேரம் அவர் தன்னை பற்றி பேசிய நேரத்தின் இடைவெளியையும் குறிப்பிட்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ