ஆணுறுப்பில் வெட்டு... காதலனை கொன்ற 2 காதலிகள்... இணைபிரியா தோழிகளின் முரட்டு ஸ்கெட்ச்!

Chennai Crime News: சென்னை அருகே இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இரண்டு பெண்களே இதற்கு மூளையாக செயல்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தின் அதிர்ச்சிகர பின்னணியை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 18, 2026, 12:22 PM IST
  • 22 வயது இளைஞர் படுகொலை
  • இவருடன் 24, 25 வயதில் இரு பெண்கள் தொடர்பில் இருந்துள்ளனர்
  • போலீசார் விசாரணையில் பகீர் தகவல் வெளியாகி உள்ளது
ஆணுறுப்பில் வெட்டு... காதலனை கொன்ற 2 காதலிகள்... இணைபிரியா தோழிகளின் முரட்டு ஸ்கெட்ச்!

Chennai Crime News: சென்னையில் 22 வயதான இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இந்த கொடூர கொலையை நிகழ்த்த ஸ்கெட்ச் போட்டது இரண்டு பெண்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Add Zee News as a Preferred Source

Chennai Crime News: காத்து வாக்குல 2 காதல்

சென்னை பல்லாவரம் அருகே உள்ள திரிசூலம் அம்மன் நகரைச் சேர்ந்தவர், செல்வகுமார் (22). கூலித் தொழிலாளியான இவருக்கு, பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரீனா (24) என்ற பெண்ணுடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர். ரீனாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருகிறார். கணவர் வேலைக்குச் சென்ற பிறகு, ரீனாவும் செல்வகுமாரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், செல்வகுமார் ரீனாவுடன் நிற்கவில்லை. ரீனாவின் நெருங்கிய தோழியான ரஜிதா (25) என்பவருடனும் செல்வகுமாருக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரீனா, ரஜிதா என இரண்டு பேருமே செல்வகுமாருடன் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது, ஆனால் ரஜிதா உடன் பழகுவது ரீனாவுக்கோ, ரீனா உடன் பழகுவது ரஜிதாவுக்கோ தெரியாமல் செல்வகுமார் பார்த்துக்கொண்டுள்ளார்.  ஒரு கட்டத்தில் இருவருடனும் செல்வகுமார் நெருங்கி பழகுவது ரீனாவுக்குத் தெரியவந்துள்ளது. உடனே இதுகுறித்து செல்வகுமாரிடம் ரீனா கேட்டிருக்கிறார். அதற்கு செல்வகுமார், "நீங்கள் இரண்டு பேருமே எனக்கு வேண்டும், என் இரண்டு கண்கள்" என சினிமா பாணியில் நீண்ட வசனத்தை பேசியிருக்கிறார்.

Chennai Crime News: விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல் 

ஆனால் இதற்கு பிறகு நடந்த சம்பவங்கள்தான் சினிமாவையே மிஞ்சி உள்ளது. போலீஸ் விசாரணையில்தான் ரீனாவும், ரஜிதா இவர்களின் உண்மை முகமே வெளிச்சத்திற்கு வந்தது. ரீனாவும், ரஜிதாவும் சாதாரண பெண்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர்களைக் கவர்ந்து, அவர்களுடன் உல்லாசமாக இருந்து, அதை வைத்து மிரட்டிப் பணம் பறிக்கும் 'ஹனி டிராப்' கும்பலாக இருவரும் செயல்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. செல்வகுமாரிடமும் பணத்திற்காகவே இருவரும் பழகியுள்ளனர், ஆனால் இது செல்வகுமாருக்கு ஆரம்பத்தில் தெரியவில்லை. ஒருகட்டத்தில் செல்வகுமாருக்கு சந்தேகம் வரவே, பணம் கொடுப்பதில் பிரச்சனை செய்துள்ளார்.

Chennai Crime News: இணைபிரியா தோழிகளின் ஸ்கெட்ச்

இனி தங்களுக்கு செல்வகுமாரால் பயனில்லை என புரிந்துகொண்ட இருவரும், அவரை கொலை செய்தால்தான் நிம்மதியாக வாழ முடியும் என முடிவெடுத்துள்ளனர். இதற்காக தோழிகள் இருவரும், ஸ்கெட்ச் போட்டு கடந்த புதன்கிழமை இரவு, செல்வகுமாருக்கு போன் செய்து, பழைய பல்லாவரம் சுபம் நகர் பூங்காவுக்கு 'ஜாலியா பேசலாம்' என ஆசை வார்த்தை கூறி ஒருவர் அழைத்துள்ளார்.  இதை நம்பிச் சென்ற செல்வகுமாருக்கு அங்கே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ரீனாவும் ரஜிதாவும், ஏற்கனவே தயார் நிலையில் வைத்திருந்த 4 ஆண் நண்பர்களுடன் அங்கு நின்று கொண்டிருந்தனர்.

Chennai Crime News: ரீனா போட்ட நாடகம்

கண் இமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அந்த கும்பல் செல்வகுமாரைச் சரமாரியாக வெட்டியது. குறிப்பாக தலை, முகம் மற்றும் ஆணுறுப்புப் பகுதியில் வெறித்தனமாகத் தாக்கி உள்ளனர். அந்த கும்பல் அவரை தாக்கிவிட்டு தப்பியோடினர். இந்த கொலை ஏதோ வழிப்பறிக் கொள்ளை போலத் தெரிய வேண்டும் என்பதற்காக, அந்த இடத்திலேயே ரீனா மயங்கி விழுந்தது போல ஒரு நாடகத்தையும் அரங்கேற்றி உள்ளார். உயிருக்குப் போராடிய செல்வகுமார், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Chennai Crime News: மூவர் கைது, மூவர் தலைமறைவு

போலீசாரின் விசாரணையில்தான் ரீனா, ரஜிதா ஆகிய இரண்டு தோழிகளும் உண்மையை ஒப்புக்கொண்டனர். இவர்களுக்கு உதவியாக இருந்த ஒரு 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | அலறிய கீழ்ப்பாக்கம்! மருத்துவமனையில் ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை.. நடந்தது என்ன?

மேலும் படிக்க | புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு காளைக்காக இளைஞர் கொலை

மேலும் படிக்க | விட்டுச் சென்ற பெண்ணை... சுட்டுக்கொன்ற Ex கணவன்... திருமண நாளில் நடந்த கொடூரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News