குமரியில் அதிர்ச்சி.. மனைவியை கொன்று சடலத்துடன் தூங்கிய கணவன்!

கன்னியாகுமரியில் கணவர் மனைவியைக் கொன்றுவிட்டு, இறந்த பிறகு அவருடன் தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - R Balaji | Last Updated : Jun 29, 2025, 03:20 PM IST
  • குமரியில் அதிர்ச்சி
  • மனைவியை கொன்ற கணவன்
குமரியில் அதிர்ச்சி.. மனைவியை கொன்று சடலத்துடன் தூங்கிய கணவன்!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மத்திகோடு என்ற பகுதியை சேர்ந்தவர் பவிதா நித்ய செல்வி (39). இவருடைய கணவர் டார்வின் (46). இவர்களுக்கு 9 வயதில் பென்குரூஸ் என்ற மகனும், 7 வயதில் டிக்ஸ்மெரின் என்ற மகனும் உள்ளனர். பவிதா வசதியான குடும்பம் என்பதாலும் அவருக்கு சிறிய அளவில் உடல்நிலையில் பிரச்சனை இருந்த காரணத்தினாலும் வீட்டோடு மாப்பிளையாக பார்த்து டாரிவினை திருமணம் செய்து வைத்து உள்ளனர். 

Add Zee News as a Preferred Source

இதன் காரணமாக கணவன் மனைவி இடையே அவ்வப்போது தகறாறு ஏற்பட்டு வந்து உள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) இரண்டு குழந்தைகளும் தாத்தா வீட்டுக்கு சென்று உள்ளனர். இதையடுத்து கணவன் டார்வின் மற்றும் மனைவி பபிதா நித்ய செல்வி இருவரும் தனியாக இருந்து உள்ளனர். இச்சூழலில் இவர்களுக்கு இடையே தகறாறு ஏற்பட்டு வாக்குவாதம் நடைபெற்று உள்ளது. 

அதன் பின் நேற்று காலை முதல் மாலை வரை வீட்டில் இருந்து யாரும் வெளியே வராமல் இருந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் திறந்த நிலையில் காணப்பட வீட்டில் சென்று பார்த்தபோது, பவிதா படுக்கையில் உயிரிழந்த நிலையில் காணப்படார். அருகில் கணவர் டார்வின் படுத்து உறங்கிய நிலையில் காணப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து டாரிவினிடம் விசாரித்த போது, வீட்டு மாப்பிள்ளை என்பதால், தன்னை அவமதித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்து மனைவியை 12 மணி நேரத்திற்கு முன் கழுதை நெரித்து கொலை செய்து விட்டு சடலத்தை எங்கு கொண்டு வீசலாம் என சிந்தித்து கொண்டு படத்ததாகவும் அப்படியே தூங்கி விட்டதாகவும் தெரிவித்து உள்ளார். இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து டார்வினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிங்க: தமிழக அரசு துறைகளில் 1910 காலிப்பணியிடங்கள்.. கடைசி தேதி இதுதான்.. TNPSC வெளியிட்ட குட் நியூஸ்!

மேலும் படிங்க: நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News