)
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதிதாக ஜெஸ்ரில் என்ற சிபிஎஸ்இ பள்ளி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த பள்ளியில் மதுராபுரி வேங்கை பெட்டியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் அஸ்விந்த் வயது 7 இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். இச்சூழலில், இன்று (ஜூன் 30) வழக்கம் போல் பள்ளி செல்ல தயாராகி உள்ளார். ஆனால், பள்ளி வாகனம் வந்து சிறுவனை அழைத்து செல்லாமல், காரில் வந்து அஸ்விந்த் மாணவனை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (ஜூன் 300 மாலை பள்ளி பணியாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மூலமாக பெற்றோரை தொடர்பு கொண்டு மாணவனுக்கு பிக்ஸ் வந்ததாகவும் சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பதறி அடித்து அரசு மருத்துவமனையில் பார்த்தபோது மாணவனின் வாயிலும் மூக்கிலும் ரத்தம் கசிந்தவாறு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை தாங்க முடியாத பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது அனைத்து எண்களும் சுவிட்ச் ஆப்பில் இருந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சிங்கம்புணரி போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது திருப்பத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் மாணவனின் உடலை பார்க்க வருகை தந்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 28) அஜித்குமார் என்பவர் லாக்கப் டெத் ஆன சம்பவத்தை அடுத்து, தற்போது இரண்டாம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ