)
மாந்தோப்பில் 80 வயது மூதாட்டியிடம் போதையில் பாலியல் ரீதியாக அத்துமீறிய இளைஞன், மூதாட்டி தவறி விழுந்தும் விடாமல் தரையில் தரதரவென இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் மூதாட்டியை கொலை செய்து வெறிச் செயலில் ஈடுபட்ட இளைஞன் கைது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கீழ் விசாரம் பகுதியை சேர்ந்தவர் சுசீலா(80). இவர் தனக்கு சொந்தமாக உள்ள மாங்காய் தோப்பில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய மகனான சிவக்குமார் கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்த நிலையில் மருமகளான லோகலஷ்மியுடன் சேர்ந்து, மாந்தோப்பில் செங்கல் சூளை வைத்து நடத்தி வந்துள்ளனர்.
இந்த பகுதிக்கு நேற்று மாலை சுமார் 5 மணி அளவில், கத்தியவாடியை சேர்ந்த நந்தகுமார்(19) என்ற இளைஞன், மதுபோதையில் வந்ததாக தெரிகிறது. அப்போது தோப்பில் உள்ள வீட்டிற்குள் நுழைந்ததோடு, வீட்டில் இருந்த மூதாட்டியிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து மூதாட்டி இடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி தப்பிக்க முயற்சித்தபோது, தவறி தரையில் விழுந்துள்ளார். ஆனால் அதைக் கூட பொருட்படுத்தாமல், தரையில் விழுந்த மூதாட்டியை தரதரவென இளைஞன் இழுத்துச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. மேலும் மூதாட்டி இடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்ததாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஆற்காடு நகர போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மூதாட்டியின் மருமகள் அளித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு, இளைஞனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 80 வயது மூதாட்டியை மது போதையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தி இளைஞன் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ