2 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.. வேலூரில் அதிர்ச்சி!

வேலூரில் இரண்டு மாத கர்ப்பிணி பெண் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

Written by - R Balaji | Last Updated : May 6, 2025, 07:34 PM IST
  • வேலூரில் நடந்த அதிர்ச்சி
  • இரண்டு மாத கர்ப்பிணி பெண் தற்கொலை
2 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.. வேலூரில் அதிர்ச்சி!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அருப்பு மேடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ். அவரது மனைவி கீர்த்தனா. இருவருக்குமே வயது 20.  இவர்கள் கடந்த ஆண்டு 4 ஆம் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் கீர்த்தனா கடந்த மார்ச் மாதம் கர்ப்பமாகி தற்போது இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளார். 

Add Zee News as a Preferred Source

இந்த நிலையில், இன்று (மே 06) மதியம் கீர்த்தனாவுக்கு பிக்ஸ் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலூர் அரசு பென்ட்லான்ட் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது அந்த கர்ப்பிணி பெண், அழைத்து வந்த ஐந்து நிமிடத்தில் பிரசவ அறையில் இருந்து சிறுநீர் கழிக்க செல்வதாக கூறி கழிப்பறைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் கழிவறையில் உள்ள ஜன்னலில் அந்தப் பெண் வைத்திருந்த துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அவரது கணவர் சென்று பார்த்துள்ளார். அப்போது தூக்கு மாட்டி கீர்த்தனா இருந்தது தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து கழிவறையின் சுவரை எகிறி குதித்து அந்தப் கர்ப்பிணியை மீட்டு அடுக்கம்பாறை உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அந்த கர்ப்பிணிப் பெண்ணை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வேலூர் தெற்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிங்க: தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா... பதற்றமான சூழல் இருக்கிறது - நயினார் நாகேந்திரன்

மேலும் படிங்க: முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை... இது நல்லதா? - தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News