ஸ்ரீவில்லிப்புத்தூரில் 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக விமர்சனம் எழுந்தது. இது தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கவிஞர் வைரமுத்துவின் கருத்துக்கு பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததோடு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, கவிஞர் வைரமுத்துவி ஆண்டாள் குறித்து கருத்துக்கு விளக்கம் அளித்ததுடன், வருத்தமும் தெரிவித்துள்ளார். ஆனாலும், அவர் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து வருவதால், வைரமுத்துக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான தாக்குதல்களும், மிரட்டல்களும் நிறுத்த வேண்டும் என்று தமிழ் படைப்பாளிகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் தமிழ் படைப்பாளிகள் பலர் தங்கள் கையொப்பமிட்டுள்ளனர்.


கூட்டறிக்கை இணைப்பு:-