Sivaji Ganesan House Confiscation: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த், தன்னுடைய மனைவி அபிராமி பங்குதாரர்களாக இருக்கும் ஈசன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை வந்து நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் "ஜகஜால கில்லாடி" என்ற படத்தை தயாரித்தனர்.
Sivaji Ganesan House: ரூ.3 கோடிக்கும் மேல் கடன்
இந்த படத் தயாரிப்புக்காக "தனபாக்கியம் என்டர்பிரைசஸ்" என்ற நிறுவனத்தில் இருந்து 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார்கள். அந்த கடன் ஒப்பந்தம் செய்யும்போது, இந்த கடனை ஆண்டுக்கு 30% வட்டியுடன் திருப்பி கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த கடன் தொகையை திருப்பித் கொடுக்கவில்லை. இதையடுத்து, தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
Sivaji Ganesan House: படத்தின் உரிமைகளை ஒப்படைக்க உத்தரவு
இந்த விவகாரத்தில் தீர்வு ஏற்படும் வகையில், விசாரணை நடந்த மத்தியஸ்தராக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து இந்த விவகாரத்தை விசாரித்த மத்தியஸ்தர் நீதிபதி ரவீந்திரன், இந்த கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40,000 ரூபாயை வசூலிக்க ஏதுவாக, இந்த "ஜகஜால கில்லாடி"படத்தினுடைய அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு ஒப்படைக்கும்படி 2024ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தின் உரிமைகளை பெற்றுக்கொண்டு, அவற்றை விற்று கடன் தொகையை ஈடு செய்ய வேண்டும் என்றும், மீதத் தொகையை ஈசன் ப்ரொடக்ஷன் நிறுவனத்திடம் வழங்க வேண்டும் என்றும் மத்தியஸ்தர் நீதிபதி ரவீந்திரன் உத்தரவிட்டிருந்தார்.
Sivaji Ganesan House: மொத்த கடன் ரூ.9 கோடியை தாண்டியது
இந்த உத்தரவின்படி, இந்த படத்தினுடைய அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என்று கேட்டபோது, படம் இன்னும் முழுமை அடையவில்லை என ஈசன் ப்ரொடக்ஷன் நிறுவனம் கூறியதால், மத்தியஸ்தர் நீதிபதி ரவீந்திரன் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக்கூடிய வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தற்போது வரைக்கும் இந்த கடன் தொகை என்பது வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சத்து 5543 ரூபாய் வசூலிக்க வேண்டி இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
Sivaji Ganesan House: சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூர், இந்த வழக்கு சம்பந்தமா பதில் மனு தாக்கல் செய்வதற்கு ஈசன் ப்ரொடக்ஷன் தரப்பில் அவகாசம் கேட்டபோதும் கூட இதுவரைக்கும் பதில் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை" எனக் கூறிய நீதிபதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும் இந்த உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட சார் பதிவாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். இந்த வழக்கினுடைய விசாரணை நாளை மறுதினம் (மார்ச் 5) மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஆஸ்கர் 2025: விருதுகளை தட்டிச்சென்ற பிரபலங்கள் யார்? முழு லிஸ்ட்!
மேலும் படிக்க | IAS ஆவது ஈசி-திரைப்படம் எடுப்பது கஷ்டம்! அனிமல் பட இயக்குநர் பேச்சால் பரபரப்பு..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









