சென்னை அருகே மகன் தனது அப்பாவை கத்தியால் குத்திக்கொன்ற மகனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை புளியந்தோப்பில் வசித்து வருபவர் பாலு. இவரது வயது 50. ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு வள்ளி (42) என்ற மனைவியும் கார்த்திக் (29) என்ற மகனும் அஞ்சலை (25) என்ற மருமகளும் உள்ளனர். இவர்கள் ஓரே வீட்டில் வசித்து வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநர் பாலு குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 21) காலை 8 மணி அளவில் மகன் கார்த்திக் மற்றும் தந்தை பாலு ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சண்டை முற்றவே திடீரென மகன் கார்த்திக் அக்கம் பக்கத்தினரை அழைத்து தனது தந்தை போதையில் கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டதாக கூறி உள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பாலுவை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் இறந்த பாலுவின் மகன் கார்த்திக்கை காவல் நிலையம் அழைத்து விசாரித்தனர். அப்போது கார்த்திக் போலீசாரின் கேள்விக்கு முன்னும் பின்னும் முரணாக பதில் கூறி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் துருவி துருவி கேள்வி கேட்டனர். இதன் காரணமாக கார்த்திக் வேறு வழி உண்மையை கூறினார்.
தனது தாயார் மற்றும் மனைவி அஞ்சலையை தந்தை பாலு தவறாக பேசியதாகவும் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் ஹெல்மெட்டால் தலையில் அடித்து கத்தியால் குத்தியதாகவும் கூறினார். மேலும், அக்கம் பக்கத்தினரை அழைத்து மதுபோதையில் தன்னைத்தானே குத்திவிட்டதாக நம்பவைத்ததாகவும் கார்த்திக் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து கார்த்திக் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து சிறையில் அடைத்தனர்.
மதுபோதையில் தாயார் மற்றும் மருமகளை தவறாக பேசிய தந்தையை மகன் கத்தியால் குத்திவிட்டு, நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ