Southern Railway Latest News: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வோர்கள் பெரும்பாலும் ரயில்களிலேயே பயணித்து வருகின்றனர். குறைந்த செலவில், படுக்கை வசதி, கழிவறை வசதியுடன் இருப்பதால், தென்மாவட்ட பயணிகள் ரயில்களில் பயணித்து வருகின்றனர். இதற்காக தெற்கு ரயில்வே சார்பிலும் பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. வைகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், தேஜஸ் எக்ஸ்பிரஸ், வந்தே பாரத் ரயில்கள் உள்ளிட்டவை இயக்கப்பட்டு வருகிறது.
தென்மாவட்ட ரயில் சேவையில் மேஜர் மாற்றம்
தினந்தோறும் இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். சென்னை எழும்பூரில் இருந்து பல்வேறு ரயிலகள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதன் காரணமாக, சில முக்கிய ரயில்கள் எழும்பூருக்கு பதிலாக, தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பை தெற்கு முன்பே அறிவித்தது. அதாவது, செப்டம்பர் 10ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை எழும்பபூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து தென்மாவட்ட ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்து இருந்தது. இப்போது அந்த நாட்கள் முடிந்த நிலையில், வழக்கம்போல் எழும்பூரில் இருந்து ரயில்கள் இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இனி எழும்பூர் போகாதீங்க
ஆனால், எழும்பூரில் பணிகள் முடிவடையததால், சில முக்கிய ரயில்கள் தாம்பரத்தில் இருந்தே இயக்கப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி, நவபம்ர் 10ஆம் தேதி முதல் நவம்பர் 29ஆம் தேதி எழும்பூர் - தஞ்சாவூர் இடையே இயக்கப்படும் உழவன் எக்ஸ்பிரஸ், கொல்லம் - எழும்பூர் இடையே இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் - எழும்பூர் இடையே இயக்கப்படும் சேது அதிவேக விரைவு ரயில், ராமேஸ்வரம் - எழும்பூர் விரைவு ரயில் உள்ளிட்டவை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் புறப்பட்டு, அங்கேயே நிறுத்தப்படும். சென்னை எழும்பூர் - மும்பை அதிவிரைவு ரயில் தற்காலிகமாக சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நவம்பர் 11 முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை, காலை 6.35 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக, கடற்கரை நிலையத்திலிருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும்
மேலும், அகமதாபாத்-திருச்சிராப்பள்ளி வாராந்திர விரைவு சிறப்பு ரயில் நவம்பர் 13,20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் (வியாழன்) காலை 9.30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு ரேணிகுண்டா, மேல்பாக்கம், காட்பாடி, வேலூர் கன்டோன்மென்ட், விழுப்புரம், சென்னை, பேரூர், பேரூர், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மறு அறிவிப்பு வரும் வரை, தாம்பரத்தில் இருந்தே தென்மாவட்ட ரயில்கள் புறப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: 8ஆம் வகுப்பு படித்தால் போதும்.. கைநிறைய சம்பளத்துடன் அரசு வேலை.. மிஸ் பண்ணாதீங்க
மேலும் படிக்க: சமீபத்தில் வீடு மாற்றியவரா நீங்கள்? வாக்காளர் பட்டியலில் என்ன செய்ய வேண்டும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









