மீண்டும் தேர்தல் களத்தில் சௌமியா அன்புமணி.. பாமக குறிவைக்கும் 2 தொகுதிகள்?

கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இருந்தார் சௌமியா அன்புமணி. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சௌமியா அன்புமணி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தோல்வியை தழுவினார்.  

Written by - RK Spark | Last Updated : Mar 8, 2026, 02:52 PM IST
  • தேர்தல் களத்தில் சௌமியா அன்புமணி?
  • பாமக குறிவைக்கும் அந்த 2 விஐபி தொகுதிகள்!
  • இறுதியான ஒரு தொகுதி?
மீண்டும் தேர்தல் களத்தில் சௌமியா அன்புமணி.. பாமக குறிவைக்கும் 2 தொகுதிகள்?

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை இறுதி செய்து வருகின்றனர். அந்த தொகுதியில் யார் யார் நிற்க போகிறார்கள் மற்றும் வேட்பாளர்களை இறுதி செய்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி தங்களுக்கு தேவையான தொகுதிகளை அதிமுக தலைமையிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இருந்தார் சௌமியா அன்புமணி. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சௌமியா அன்புமணி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தான் செல்ல முடியவில்லை, சட்டமன்றத்தில் செல்லலாம் என்ற முடிவில் இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டிய சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளார் என்று கூறப்படுகிறது. இது பாமக தொண்டர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க: ஆசிரியர் காலிப் பணியிடம் அறிவிப்பு - டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய தகவல்

எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் சௌமியா அன்புமணி?

பாமகவின் கோட்டையாக தர்மபுரி மாவட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் தான் சௌமியா அன்புமணி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் தான் போட்டியிட்டு இருந்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு கடுமையான சவாலை விடுத்தது இருந்தாலும் சௌமியா அன்புமணி தோல்வியை தழுவினார். நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து இருந்தாலும், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மக்கள் பணியிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. சௌமியா அன்புமணி தர்மபுரி மாவட்டத்திலுள்ள இரண்டு முக்கிய தொகுதிகளில் ஒன்றை குறி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இரண்டு தொகுதிகள் என்ன என்ன?

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் அல்லது பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் சௌமியா அன்புமணி பாமக வேட்பாளராக போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு தொகுதிகளிலும் வன்னியர்கள் அதிகம் வசிக்கிறார்கள் என்பதால் ஜெயிப்பதற்கு சாதகமான சூழ்நிலை உருவாகும் என்று இந்த தொகுதிகளை தேர்வு செய்துள்ளனர். இந்த தொகுதிகளில் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்றும் சர்வே முடிவுகள் பாமக தலைமைக்கு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ராஜ்யசபா தேர்தலில் போட்டி 

சமீபத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு நடைபெற்றது. அதில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த சீட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் ஒரு டம்மி வேட்பாளராக சௌமியா அன்புமணியும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். ஒருவேளை அன்புமணி மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால் சௌமியா அன்புமணி வேட்பாளராக போட்டியிட்டு இருப்பார். இருப்பினும் அன்புமணியின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து சௌமியா அன்புமணி தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றுக் கொண்டார். 

சௌமியா அன்புமணி தேர்தலில் போட்டியிடுவது பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. அதிமுகவுடன் கூட்டணி தொகுதி பங்கீடுகள் தொடர்பாக பாமக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தொகுதிகள் இறுதிச் செய்யப்பட்ட பிறகு, வேட்பாளர் அறிவிப்பின்போது சௌமியா அன்புமணி போட்டியிடுவது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்றும் பாமக தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். திமுக கூட்டணியும் இந்த தொகுதிகளில் அதே சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளரை களம் இறக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க; 4 நாட்களுக்கு பொளக்கும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் அலர்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News