மக்களே லாஸ்ட் சான்ஸ்.... SIR காலக்கெடு நீட்டிப்பு - எத்தனை நாள்களுக்கு?

Date Extended to Submit SIR Form: தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான (SIR) படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.   

Written by - R Balaji | Last Updated : Dec 11, 2025, 05:25 PM IST
  • SIR காலக்கெடு நீட்டிப்பு
  • தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • முழு விவரம்
மக்களே லாஸ்ட் சான்ஸ்.... SIR காலக்கெடு நீட்டிப்பு - எத்தனை நாள்களுக்கு?

SIR Form Latest News: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (Special Intensive Revision - SIR) படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (டிசம்பர் 11) முடிவடைய இருந்தது. இந்த நிலையில், இன்னும் மூன்று நாட்கள்ள், அதாவது டிசம்பர் 14ஆம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையை அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகம், குஜராத் என 6 மாநிலங்களில் SIR படிவத்தை சமர்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தொடங்கி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. சுமார் 6 கோடி வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதனை பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை பூர்த்தி செய்து BLO அல்லது வாக்காளர் உதவி மையத்தில் சமர்பிக்க வேண்டும். இதற்கான தேதிதான் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இன்றுடன் SIR வாக்காளர் படிவம் சமர்பிக்க வேண்டும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில்தான், தற்போது டிசம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் படிவங்களை பூர்த்தி செய்து ஓப்படைத்த பின்னர் டிசம்பர் 19ஆம் தேதியில் அனைத்து வாக்காளர் பெயர்களும் வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். டிசம்பர் 14ஆம் தேதிக்குள் படிவத்தை சமர்ப்பிக்காத பட்சத்தில், அந்த வாக்காளரின் பெயர் வரைவு பட்டியலில் இடம்பெறாது. 

எஸ்ஐஆர் (SIR) என்றால் என்ன?

SIR வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் என்பது வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கு தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் ஒரு முக்கியமான பணியாகும். அதாவது, ஒரு வாக்களர் தங்கள் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து சமர்பித்தால் மட்டுமே அவர்களின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். இதுவே இந்த SIR ( Special Intensive Revision) நோக்கமாகும். 

முக்கிய அம்சங்கள்

எஸ்ஐஆர் (SIR) பணி: வாக்காளர்கள் தங்கள் கணக்கீட்டு படிவத்தை நிறப்பி அதனை உங்கள் பகுதியின் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) மூலமாக நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும். 

வரைவு பட்டியல்: கணக்கீட்டு படிவத்தை சமர்பித்தால்தான் அவர்களின் பெயர் டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட உள்ள வரைவு பட்டியலில் இடம்பெறும். 

கடைசி நாள்: ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 14, 2025. 

மேலும் படிக்க: அதிமுக உடன் கூட்டணி இல்லை...? - தவெக நிறைவேற்றிய 4 தீர்மானங்கள் என்னென்ன?

மேலும் படிக்க: இன்னும் முடியல.. மழை பெய்யும்! எங்கெல்லாம்? சென்னையில் வானிலை எப்படி?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News