Ration Shop Latest News: வடகிழக்கு பருவமழைக் காரணமாக நியாயவிலை கடைகளில் நவம்பர் மாதத்திற்கான அரிசியும் அக்டோபர் மாதத்திலேயே வழங்கப்பட உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாதத்திற்கான அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அதன் விவரங்களை பார்ப்போம்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்கள்
பொது விநியோகத் திட்டத்தின் கீழ், முன்னுரிமை (Priority) மற்றும் முன்னுரிமையற்ற (Non-Priority) குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்ற உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு சலுகை
தமிழகத்தை பொறுத்தவரை நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஒவ்வொரு வருடமும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மழை அதிகம் பெய்வது வழக்கம். எனவே பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளார்.
இந்த சிறப்பு சலுகை யாருக்கு பொருந்தும்?
தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் நவம்பர் மாதத்திற்கான அரிசியையும் அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் எனவும், அதேநேரம் நவம்பர் மாதத்திற்கான அரிசியை அக்டோபரில் பெற முடியாதவர்கள் வழக்கம் போல் நவம்பர் மாதத்தில் கூட பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.இந்த சிறப்பு வசதியினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
ரேசன் அரிசி விநியோகம் குறித்து அமைச்சர் சக்கரபாணி என்ன கூறினார்?
இந்த சிறப்பு சலுகை குறித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டின் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தில் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையுடன் சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை அனைத்து ரேஷன் கடைகளின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, வடகிழக்குப் பருவமழை காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதைக் கருத்தில் கொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை மட்டும் அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.
அதாவது அக்டோபர் மாத ஒதுக்கீடான 12-35 கிலோ அரிசியை ஏற்கனவே பெற்றவர்களும் அக்டோபர் மாத அரிசி ஒதுக்கீட்டை இதுவரை பெறாதவர்களும், நவம்பர் மாத ஒதுக்கீடான 12-35 கிலோ அரிசியை இம்மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். நவம்பர் மாத அரிசியை, அக்டோபர் மாதத்தில் பெறாதவர்கள், வழக்கம்போல் நவம்பர் மாதத்திலும் தங்களுக்குரிய அரிசியினைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதியினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க - மக்களே உஷார்! உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்: அரசின் புதிய விதிகள்!
மேலும் படிக்க - ரேஷன் கார்டு திருத்தம்! தமிழ்நாடு அரசு கொண்டு வந்த மிக முக்கிய கட்டுபாடு!
மேலும் படிக்க - தீபாவளிக்கு முன் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









