)
செல்லப்பிராணி வளர்ப்பு, தெருநாய் நலன் மற்றும் கருணையுள்ள சமூக வாழ்க்கையை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் முதன் முறையாக தனித்துவமான விழிப்புணர்வு நிகழ்ச்சியாக Wag & Walk Dog என்ற பெயரில் நாய் நடைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை வானகரம் வேதாந்தா அகாடமி சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற, வாக் அண்ட் வாக்-டாக் வாக்கத்தான் நிகழ்வை, PEPHANDS அறக்கட்டளை என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த அமைப்பு தமிழ்நாடு முழுவதும் கால்நடை வளர்ப்பு, சமூக நலன் மற்றும் விலங்கு பராமரிப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
இதில் வெளிநாட்டு ரக நாய்களான லேப்ரோடாக், புல்லிகுட்டான், ஷிட்ஷூ, பாக்சர், கோல்டன் ரிட்ரீவர், பாடுல் மற்றும் இந்திய ரகத்தை சேர்ந்த சிப்பிபாரை, கன்னி, ராஜபாளையம் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட நாய்களுடன் செல்லப்பிராணி உரிமையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, யுனைடெட் கென்னல் கிளப் இந்தியா தென்னிந்தியத் ஆலோசகர் டாக்டர் பார்த்தசாரதி, வேதாந்த அகாடமி தலைவர் திரு சத்திஷ், மட்ஸ் பூர்வீகம்
திருமதி. சரண்யா, ஜஸ்ஃபர்பெட்ஸ் அமைப்பு திருமதி ஜெயந்தி, சான்ஸ் விலங்கு அறக்கட்டளையை நிறுவினா் திருமதி சுதா, பெட்குர் மருத்துவமனை டாக்டர் ஜமீலா, சென்னை ஸ்னிஃபர்ஸ் திரு. சரத், தன்னார்வலர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

பொறுப்பான செல்லப்பிராணி உரிமை மற்றும் பராமரிப்பை ஊக்குவிக்கவும் தெருநாய்கள் மற்றும் கைவிடப்பட்ட நாய்களின் நலன் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், சமூகங்களில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே வலுவான, கனிவான பிணைப்பை வளர்ப்பதும் இந்த நிகழ்வின் நோக்கம் என இந்த நிகழ்விற்கான ஏற்பாடு செய்த PEPHANDS அறக்கட்டளையின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ