Tamil Nadu Government : 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்னும் வாங்காமல் இருப்பவர்களுக்கு அரசு ஒரு எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்து, எஸ்எஸ்எல்சி வகுப்பு நிறைவு செய்து பல ஆண்டுகளாக மதிப்பெண் சான்றிதழ் வாங்காதவர்களாக இருப்பின் உங்களுக்கான அறிவிப்பு தான் இது. மதிப்பெண் சான்றிதழ் குறிப்பிட்ட தேதிக்குள் வாங்கவில்லை என்றால் அழிக்கப்படும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் எச்சரிக்கை
திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குட்பட்ட இடைநிலைப் பொதுத் தேர்வு (SSLC) எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலம் தேர்வர்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட்டது. தேர்வு மையத்தில் நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாத தனித்தேர்வர்களின் இடைநிலை (SSLC) மதிப்பெண் சான்றிதழ்கள் இவ்வலுவலகத்தில் மீள பெறப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாமலிருக்கும் மார்ச் 2014, ஜீன் 2014, அக்டோபர் 2014, மார்ச் 2015, ஜீன் 2015, அக்டோபர் 2015, மார்ச் 2016, ஜீன் 2016, அக்டோபர் 2016, மார்ச் 2017, ஜீன் 2017, அக்டோபர் 2017, மார்ச் 2018, ஜீன் 2018, அக்டோபர் 2018 ஆகிய 15 பருவங்களுக்குரிய இடைநிலை (SSLC) மதிப்பெண் சான்றிதழ்களை மற்றும் மேற்காண் தேர்வுக்கு விண்ணப்பத்துடன் இணைத்தனுப்பிய தேர்வரால் பெறப்படாமலிருக்கும் பள்ளி மாற்றுச் சான்றிதழ்கள் / மதிப்பெண் சான்றிதழ்கள் இவ்வலுவலகத்தில் இருப்பில் உள்ளன. தேர்வுத்துறை விதிமுறைகளின்படி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 வருடங்கள் கழித்து தனித்தேர்வர்களால் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும்.
எனவே, மேலே குறிப்பிட்ட பருவங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தனித்தேர்வர்கள் இந்த செய்தி அறிவிப்பு வெளியிடப்படும் நாளில் இருந்து 15 நாட்களுக்குள் இவ்வலுவலகத்தை அலுவலகப் பணி நாட்களில் அலுவலக வேலை நேரத்தில் நேரில் அணுகியோ அல்லது ரூ.45/- மதிப்புள்ள அஞ்சல்வில்லை ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட உறையுடன் தேர்வரின் கையொப்பமிடப்பட்ட கோரிக்கைக் கடிதம், தேர்வரின் தேர்வுகூட நுழைவுச்சீட்டு (HALL TICKET) / தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (PROVISIONAL MARK SHEET) நகல் இணைத்து இவ்வலுவலகத்திற்கு அனுப்பியோ உரிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பருவங்களுக்குரிய தனித் தேர்வர்களால் கோரப்படாத மதிப்பெண் சான்றிதழ்களை பெற இதுவே இறுதி வாய்ப்பாகும், தவறினால் மேற்படி தேர்வுப் பருவ மதிப்பெண் சான்றிதழ்களை விதிமுறைகளின்படி அழிப்பதற்கு இவ்வலுவலகத்தால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கபகபட்டுள்ளது.
வேலைவாய்பற்றோர் உதவித்தொகை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகைபெற விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 01.10.2025 முதல் 31.12.2025 வரையிலான காலாண்டிற்கு 30.09.2025 அன்றைய தேதியில், நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பள்ளியிறுதி வகுப்பு தோல்வி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுற்ற பொது பிரிவினருக்கும் மேற்கண்ட கல்வித்தகுதிகளை பதிவு செய்து ஓராண்டு முடிவுற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தகுதியுடையவராவர்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெறுபவர்கள்
1.ஆண்டு வருமானம் ரூ.72,000/-(பொதுவானவர்களுக்கு) இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது மற்றும் வருமான உச்சவரம்பு கிடையாது.
2. வயது வரம்பு தாழ்த்தப்பட்ட / பழங்குடியினருக்கு - 45 வயதுக்குள் இருத்தல்வேண்டும். இதர வகுப்பினர்களுக்கு 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
3. உதவித்தொகை பெற விரும்புவோர் தினசரி பள்ளி / கல்லூரி சென்று பயிலும் மாணவராக இருத்தல் கூடாது.
4. உதவித்தொகை பெற விரும்புவோர் அரசு அல்லது தனியார் துறையிலோ பணிபுரிபவராக இருத்தல் கூடாது.
5. விண்ணப்பதாரர் அரசுத்துறை / தனியார் துறையில் எந்தவிதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பில் ஈடுப்பட்டவராகவோ இருத்தல் கூடாது. மேலும், விண்ணப்பதாரர் தனியாரிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ வேறு எந்த வகையிலும் எந்தவிதமான உதவித்தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது.
மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்ட தகுதியுள்ள மனுதாரர்கள் https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள மூலம் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்தும் அல்லது அலுவலக வேலை நாட்களில் அலுவலத்திலும் நேரடியாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஆவினில் தீபாவளி சிறப்பு விற்பனை! இனிப்பு, கார வகைகள் முழு விலை பட்டியல்
மேலும் படிக்க: கரூர் சம்பவம்.. விஜய் ஒரு தலைவராக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் - கமல்ஹாசன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









