அமைச்சரோடு துபாய்க்கு சுற்றுலா - உற்சாகத்தில் மாணவ, மாணவிகள்

வினாடி வினாவில் சிறப்பாக செயல்பட்ட மாணவ - மாணவிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் துபாய்க்கு கல்வி சுற்றுலா சென்றனர்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 10, 2022, 12:29 PM IST
  • வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது
  • இதில் மாநில அளவில் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்
  • அவர்கள் அமைச்சருடன் துபாய்க்கு கல்வி சுற்றுலா
அமைச்சரோடு துபாய்க்கு சுற்றுலா - உற்சாகத்தில் மாணவ, மாணவிகள் title=

2021ஆம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியில் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவ-மாணவிகளை மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, 68 மாணவ-மாணவிகளை கல்வித் துறை தேர்வு செய்து இருக்கிறது. ஏற்கனவே அறிவித்தபடி, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகள் வெளிநாட்டுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். அந்த வகையில் 68 மாணவர்களுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (வியாழக்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்ல உள்ளார். 

மாணவ - மாணவிகளின் பாதுகாப்புக்காக 5 ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சி.அமுதவல்லி உள்பட 3 அதிகாரிகள் என மொத்தம் 76 பேர் துபாய்க்கு பயணம் மேற்கொள்கின்றனர். வருகிற 13ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை துபாயில் இருக்கும் அவர்கள், அங்கு ஷார்ஜாவில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தக திருவிழாவிலும் பங்கு பெற உள்ளனர். 

இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துகளோடு அரசுப் பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு சார்ஜா பன்னாட்டு புத்தகத் திருவிழாவிற்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டோம்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | அப்போ எம்.பி, இப்போ டாக்டர் பட்டம் - இளையராஜாவுக்கு வழங்குகிறார் பிரதமர்

மேலும் படிக்க | கோவை கார் சிலிண்டர் வெடிப்பு - 45 இடங்களில் என்.ஐ.ஏ மீண்டும் சோதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News