கட்சி தொடங்கியதும் முதல்வரா? விஜய்யை மறைமுகமாக விமர்சித்த சுப‌.வீரபாண்டியன்!

தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கியவர்கள் கூட முதல்வர் கனவில் இருப்பதாகவும், 36 பேர் அமைச்சர் ஆகும் கனவில் உள்ளதாகவும் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் விமர்சித்தார்.

Written by - RK Spark | Last Updated : Apr 26, 2025, 09:28 AM IST
  • கட்சி தொடங்கியதும் முதல்வராக ஆசைப்படுகிறார்கள்.
  • விஜய்யை மறைமுகமாக விமர்சனம்.
  • கோவையில் சுப‌.வீரபாண்டியன் பேச்சு.
கட்சி தொடங்கியதும் முதல்வரா? விஜய்யை மறைமுகமாக விமர்சித்த சுப‌.வீரபாண்டியன்!

தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கியவர்கள் கூட முதல்வர் கனவில் இருப்பதாகவும், 36 பேர் அமைச்சர் ஆகும் கனவில் உள்ளதாகவும் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் விமர்சித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் மு.க. ஸ்டாலினே மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மகளிர் அணியின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மற்றும் சுப வீரபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | மீண்டும் சலசலப்பு! தமிழக ஆளுநர் நடத்தும் மாநாட்டை புறக்கணித்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள்!

கூட்டத்தில் பேசிய சுப வீரபாண்டியன், “திராவிட இயக்கம் தேர்தல் அரசியலுக்காக கட்சி தொடங்கவில்லை. சுயமரியாதை மற்றும் இன விடுதலைக்காகவே இயக்கம் உருவாக்கப்பட்டது. ஆனால், இப்போது தமிழகத்தில் 36 பேர் முதலமைச்சர் கனவுடன் இருக்கின்றனர். இருப்பினும், வரும் தேர்தலில் மு.க. ஸ்டாலினே முதல்வராவார்,” என்று கூறினார். இது நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை மறைமுகமாக விமர்சிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும், அவர், “பொய் வழக்குகள் போடப்பட்டு அமைச்சர் பதவி கேட்கப்படுகிறது. பெண்கள் சுயமரியாதைக்காக போராட வேண்டும். ஆண்களும் பெண்களும் நட்பாக இருக்கும் சமுதாயமே சிறந்தது. பெண்களுக்கு நடத்தப்படும் சமய சடங்குகளில் இருந்து விடுபட்டால் மட்டுமே பெண் சமுதாயம் உயரும்,” என்று வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | 'மோடி எதுவுமே செய்ய மாட்டார்... உங்களை தூங்க வைத்துவிடுவார்' - சுப்பிரமணியன் சுவாமி தாக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News