Summer Heat Safety, Tamilnadu Guidelines : கோடை வெப்பம் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அதிக தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, வீட்டில் மின் கசிவு, சிலிண்டர் விபத்து ஏற்படவாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் வெயிட்டிருக்கும் அறிவுறுத்தலில், தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் காலம் தொடக்கத்திலேயே அதிக வெப்பமாக இருந்து வருவதால் பொறுமக்கள் நற்காப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புக்களை தடுக்க செய்ய வேண்டியவை / வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள்
உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போதுகுடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஓ.ஆர்.சஸ் எலுமிச்சை ஜீஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். பருவகால பழங்கள். காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்த வரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும்.
மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்ல வேண்டும். மழலைப் பள்ளிகளை கோடை காலம் முடியும் வரை செயல்படுத்த வேண்டாம். குழத்தைகளை வாகனங்களில் தணியே அமர்த்தியிட்டு வெளியே செல்ல கூடாது குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறானிகள். கர்ப்பிணி பெண்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
முதியவர்களுக்கான வழிமுறைகள்
தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். முதியவர்களின் அருகாமையில் தொலைபேசி உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாகத் தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தனிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளையில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கால்நடைகளுக்கான வழிமுறைகள்
கால்நடைகளுக்கு நிழல் தரும் கூரை அடியில் கட்டவும் போதிய வசதி செய்து கொடுக்கவும். கால்நடைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போட வேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீர் கொடுக்க வேண்டும். செல்லப் பிராணிகளை வாகனங்களில் அடைத்து வைக்க வேண்டாம்.
மேலும், பருவநிலை மாற்றங்களினால் இந்த ஆண்டு கோடை வெயில் துவக்கத்திலேயே வெப்பம் அதிகமாக உள்ளதால், மாடி வீடுகள் மற்றும் கூரை வீடுகளிலும் உள்ள மின் ஒயர்கள் உருகி சாரிட் சர்க்யூட் ஏற்பட்டு தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் மாடி வீடுகளின் மேற் கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே இரும்புகள் சூடாகி மின்விசிறி டியூப்லைட் சுழன்று கீழே விழும் தன்மையைப் பெறுகின்றன.
எனவே கோடை முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன், கூரை வீடுகளில் வசிப்பவர்கள் தண்ணீரை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். விலையுயர்ந்த பொருட்கள், நில ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம் கேஸ் சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அணைத்துவிட வேண்டும். மண்ணெண்ணை விளக்குகளை கவனமாக கையாள வேண்டும். வாகனங்களில் முழுவதுமாக எரிபொருள் நிரப்புவதை தவிர்க்க வேண்டும். கோடை காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலையின் வளப்பகுதியில் மனித செயல்களால் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வனங்கள் மற்றும் வன விலங்குகள் பாதிக்கப்படுவதால் வனப்பகுதிக்குள் மனிதர்கள் செல்ல அனுமதி இல்லை எனவும் தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: தமிழக அரசின் அதிரடி திட்டம்! ரூ. 200 செலவில் வீடுகளுக்கு இணைய சேவை!
மேலும் படிங்க: அரசு பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ், ஐஐடி மெட்ராஸ்-ல் படிக்கும் வாய்ப்பு..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









