அரசு ஊழியர்களுக்கு ஸ்வீட் நியூஸ்... அகவிலைப்படி உயர்வு - ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Tamil Nadu DA Hike: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 46 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 25, 2023, 02:01 PM IST
  • இது 2023 ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாகும் என அறிவிப்பு.
  • தற்போது வரை அகவிலைப்படி 42 சதவீதமாக இருந்தது.
  • ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியில் மாற்றம் வரும்.
அரசு ஊழியர்களுக்கு ஸ்வீட் நியூஸ்...  அகவிலைப்படி உயர்வு - ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Tamil Nadu DA Hike: தமிழ்நாட்டின் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, 2023ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

வாக்குறுதியும், செயல்பாடும்...

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் பெரும்பணியில், அரசோடு இணைந்து பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. 

முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.

மேலும் படிக்க | அகவிலைப்படி 50% அல்ல, 51% ஆக உயரும்: ஜனவரியில் அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசு

16 லட்சம் ஊழியர்கள்

அவ்வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து, ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது.

தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 2023ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2546.16 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்" என குறிப்பிட்டுள்ளது. 

மத்திய அரசும் அறிவிப்பு

கடந்த அக். 18ஆம் தேதி அன்று மத்திய அரசின் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் டிஏ மற்றும் டிஆர் ஆகியவற்றை 4 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மத்திய ​​அரசு ஊழியர்களுக்கு 42 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது, இது 46 சதவீதமாக உயர்த்தப்படும். 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரியில் அடுத்த அதிரடி அறிவிப்பு: 50% அகவிலைப்படி, ஊதிய ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News