)
TN Government TAHDCO Free Training: இன்றைய நவீன உலகில் கார்ப்பரேட் மற்றும் உற்பத்தித் துறை (Manufacturing Sector) அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. வெறும் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு மட்டும் கையில் இருந்தால் போதாது, தொழிற்சாலைகளுக்குத் தேவையான அதிநவீன தொழில்நுட்பத் திறன்களும் (Industry-ready Skills) இருந்தால்தான் வேலைவாய்ப்பு நிச்சயம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த தேவையை உணர்ந்து, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் நோக்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ - TAHDCO) ஒரு சூப்பரான அரிய வாய்ப்பை அறிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்திக்குறிப்பில் உள்ள முழுமையான விவரங்களை இங்கே காணலாம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகளுக்கு, தற்போதைய ட்ரெண்டிங்கில் இருக்கும் CAD, CAM மற்றும் இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் (Industrial Automation) ஆகிய உயர் தொழில்நுட்பப் பயிற்சிகளை முற்றிலும் இலவசமாக வழங்க தாட்கோ முன்வந்துள்ளது.
உற்பத்தி மற்றும் மெக்கானிக்கல் துறைகளில் டிசைனிங் செய்ய மிக முக்கியத் தேவையான கணினி சார்ந்த வடிவமைப்பு மற்றும் உற்பத்திப் பயிற்சிகளும், நவீன தொழிற்சாலைகளில் மனித உழைப்பைக் குறைத்து இயந்திரங்களை இயக்கப் பயன்படும் ஆட்டோமேஷன் பயிற்சிகளும் இங்கு கற்றுத்தரப்படவுள்ளன:
இந்த சிறப்புப் பயிற்சியானது மொத்தம் 90 நாட்களுக்கு (3 மாதங்கள்) முழுநேரப் பயிற்சியாக நடத்தப்படவுள்ளது. இந்தப் பயிற்சிகள் பெரம்பலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள முன்னணி பயிற்சி மையங்களில் நடைபெற உள்ளன.
தகுதி பெற்று தேர்வாகும் மாணவ, மாணவிகள் பயிற்சி நடைபெறும் மாவட்டங்களுக்குச் சென்று தங்கிப் படிப்பதற்கான முழு தங்கும் மற்றும் உணவுச் செலவினத் தொகையையும் தாட்கோ நிறுவனமே முழுமையாக ஏற்கும். இதனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு எவ்வித நிதிச் சுமையும் இருக்காது.
இந்தப் பயிற்சியின் ஆகச்சிறந்த சிறப்பம்சமே இதன் வேலைவாய்ப்பு உத்தரவாதம் தான். 90 நாட்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துத் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும் தனியார் நிறுவனத்தின் மூலமாகவே 100% வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். வேலையில் சேரும் ஆரம்ப காலத்திலேயே மாத ஊதியமாக சுமார் ரூ.25,000/- முதல் ரூ.40,000/- வரை ஈட்டக்கூடிய அருமையான வேலைவாய்ப்புகள் முன்னணி நிறுவனங்களில் உங்களுக்குக் காத்திருக்கின்றன.
தாட்கோ நிறுவனம் இத்தகைய குறுகிய கால உயர் தொழில்நுட்பப் பயிற்சிகளை தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) தரநிலைகளுக்கு ஏற்ப வழங்கி வருகிறது. இதன் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் கார்ப்பரேட் நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டவை என்பதால் வேலைவாய்ப்பு பெறுவது மிகவும் எளிது.
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பும் தகுதியுடைய இளைஞர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் உடனடியாகப் பதிவு செய்து கொள்ளலாம்.