இளம் தலைமுறையினரின் திறமை இந்திய பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் டாலரை நோக்கிக் கொண்டு செல்லும் என பிரதமர் மோடி உரை! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை ஐஐடியில் நடைபெறும் பட்டமளிப்பு விழா மேடைக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். அவருடன், கவர்னர் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை வேந்தர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். வந்தே மாதரம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. ஐஐடி மாணவர்களே இந்த பாடல்களை பாட நிகழ்ச்சி இனிதே துவங்கியது. 


பட்டங்களை வழங்கிய பின் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: "சென்னை ஐஐடியில் படிக்கும் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். இங்கு படிக்கும் நீங்கள் அதிகம் கற்கிறீர்கள். சில தினங்களுக்கு முன்தான் நான் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினேன். அங்கு பல விஞ்ஞானிகள், தொழில் அதிபர்களை சந்தித்தேன். அவர்களில் பலர் உங்கள் சீனியர்கள். ஐஐடிக்களில் படித்து இங்கு கிடைத்த அறிவால் உலகை கலக்கி வருகிறார்கள். அவர்கள் உலக அளவில் இந்தியாவின் மதிப்பை உயர செய்துள்ளனர். 


இந்தியா - சிங்கப்பூர் விஞ்ஞானிகள் சேர்ந்து தொழில்நுட்பத்தில் சாதித்து வருகின்றனர். இது தான் விஞ்ஞானம், கடின உழைப்பு மற்றும் கூட்டு முயற்சியின் பலன். கல்வி நிறுவனங்கள் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஐஐடி சென்னை விளங்குகிறது. கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, ஆராய்ச்சி துறையை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். ஆராய்ச்சி துறையை ஊக்குவிக்க, மத்திய அரசு பல நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 




சாதனைகளுக்கு உங்கள் குடும்ப பின்ணணி தேவை இல்லை. திறமை எங்கு இருக்கிறதோ, அங்கு வெற்றி நிச்சயம். நீங்கள் எவ்வளவு முயற்சித்து இங்கு வந்துள்ளீர்கள் என்பதை சற்று யோசியுங்கள். நீங்கள் இங்கிருந்து பட்டம் பெற்று வெளியேறும்போது, மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது.