Tamil Nadu Latest Crime News: தமிழ்நாட்டில் சமீபமாகவே கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்த நிலையில், இன்று மட்டும் சென்னையில் இரண்டு பேர், தென்காசியில் ஒருவர் மற்றும் கிருஷ்ணகிரியில் ஒருவர் என மொத்தமாக 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நடந்த அடுத்தடுத்த கொலைகள்
1) சென்னை பல்லாவரம் அருகே திரிசூலம் பகுதியில் இரண்டு பேர் குடிசை வீட்டில் தங்கி இருந்துள்ளனர். இவர்களை மர்ம கும்பல் ஒன்று கொலை செய்துள்ளது. முடிச்சூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவருடன் 17 வயது சிறுவனும் தங்கி இருந்துள்ளான். இவர்கள் இருவரையும் வெட்டி கொலை செய்துள்ளனர்.
2) தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரை சேர்ந்தவர் ஆறுமுகம். வயது 63. இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், ஆறுமுகம் வயலில் வேலை செய்துக்கொண்டிருக்கும்போது, வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
3) கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் முதியவரை கொலை செய்துவிட்டு, முதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 75 வயது முதியவர் வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்துள்ளார். அவரை கல்லை போட்டு மர்ம நபர் ஒருவர் கொலை செய்துவிட்டு, முதயவரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
Edappadi Palaniswami Questions Law And Order In Tamil Nadu: இப்படி தமிழ்நாட்டில் இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், இந்த கொலை சம்பவங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசின் சட்ட ஒழுங்கை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். அவர் திமுக ஆண்டது போதும், மக்கள் மாண்டது போதும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கேள்வி
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நேற்றைய தினம் #பவானி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில், கடந்த 48 மணி நேரங்களில் நடைபெற்ற பல்வேறு சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தான செய்திகளைப் பட்டியலிட்டு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதை சுட்டிக்காட்டினேன்.
இன்றைய தினம் (தற்போது வரை) செய்திகளில் வந்துள்ள "கொலை நிலவரத்தை" சுட்டிக்காட்ட விழைகிறேன்.
- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, முதியவர் கொலை செய்யப்பட்டு, மூதாட்டி மனைவிக்கு பாலியல் வன்கொடுமை
- சென்னை திரிசூலத்தில் குடிசையில் தங்கியிருந்த இருவர் படுகொலை
- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விவசாயி படுகொலை
இப்படி தொடர்ச்சியாக வரும் கொலை செய்திகள், பாலியல் குற்றச் செய்திகள் மக்களிடையே அச்ச உணர்வை அதிகரித்துள்ளது.
முதியோருக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு கொடூரமான நிலை? இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டிய பொம்மை முதல்வர், கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறையாவது சட்டம் ஒழுங்கைப் பற்றி வாய் திறந்து பேசியுள்ளாரா?
தென்காசி விவசாயி கொலையில், காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்பட்டது என உயிரிழந்த விவசாயியின் மகன் தெரிவித்துள்ளார்.
திமுக ஆண்டது போதும், மக்கள் மாண்டது போதும்
குற்றத்திற்கான எச்சரிக்கை இருந்தும் அதை காவல்துறை தடுக்காமல் இருந்ததை எப்படி மு.க. ஸ்டாலின் நியாயப்படுத்த முடியும்? ஸ்டாலின் அவர்களே- உங்கள் ஆட்சியில் "அங்கொன்றும் இங்கொன்றுமாக" கொலைகள் நடக்கவில்லை. "எங்கும் கொலை, எப்போதும் கொலை" தான் நடக்கிறது. நீங்கள் ஆண்டது போதும்; மக்கள் மாண்டது போதும்!
மேற்கூறிய வழக்குகளில் குற்றம் இழைத்தோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொம்மை முதல்வரின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். தனது ஆட்சியின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் திமுக அரசு, இருக்கும் கொஞ்ச நாட்களிலாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: பத்திரப்பதிவு : தமிழ்நாடு அரசு கொடுத்த முக்கிய அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









