Tamilnadu Agriculture Budget : விவசாயிகளுக்கான இலவச அறிவிப்புகள் என்னென்ன?

Tamilnadu Agriculture Budget : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்ட இலவச அறிவிப்புகள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம். 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 15, 2025, 12:46 PM IST
  • தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்
  • விவசாயிகள் நேரடியாக பலன் பெறும் திட்டங்கள்
  • இலவச அறிவிப்புகளை வாரி வழங்கிய அரசு
Tamilnadu Agriculture Budget : விவசாயிகளுக்கான இலவச அறிவிப்புகள் என்னென்ன?

Tamilnadu Agriculture Budget Free Schemes : தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 5வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு இலவச அறிவிப்புகளை விவசாயிகளுக்காக வெளியிட்டார். அதில் முக்கியமான அறிவிப்புகளை இங்கே பார்க்கலாம். முதலமைச்சர் உழவர் சேவை மையங்கள் 1000 அமைக்க 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தரமான விதைகள் வழங்க ரூ. 52 கோடி நிதி ஒதுக்கீடு. 3 லட்சம் ஏக்கரில் கோடை உழவு செய்ய ரூ. 24 கோடி மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும். 

Add Zee News as a Preferred Source

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு. இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20,000ல் இருந்து ரூ.30,000 உயர்த்தப்படும். இறுதி சடங்கு நிதி உதவி ரூ. 2,500ல் இருந்து ரூ. 10,000 உயர்வு. ஒருங்கிணைந்த பண்ணையம் உள்ளிட்ட திட்டங்களில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின உழவர்களுக்கு கூடுதல் மானியம்.  நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 முன்னோடி உழவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள்.

பழச்செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். பயிர் வகை விதை தொகுப்பு 1 லட்சம் இல்லங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். நகர்ப்புற, கிராமப்புற மக்களின் ஊட்டச்சத்துகளை பாதுகாக்க 9 லட்சம் குடும்பங்களுக்கு, 75% மானியத்தில் எலுமிச்சை, கொய்யா செடிகளின் தொகுப்பு வழங்கபடும். கரும்புக்கான ஊக்கத் தொகை, ரூ. 215ல் இருந்து ரூ. 349 ஆக உயர்வு. கரும்பு டன் ஒன்றுக்கு 3500 வழங்கப்படும். இதற்காக ரூ. 297 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மின்சாரம் இணைப்பு இல்லாத உழவர்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் வழங்க ரூ. 24 கோடி ஒதுக்கீடு. மின் மேட்டார் பம்பு செட்டுகள் அமைக்க மானியம் வழங்க ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உழவர்கள் குறைந்த வாடகையில் இயந்திரம் பெற, ரூ. 17  கோடியில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்கப்படும். உழவர்களுக்கு 10 லட்சம் வரை முதலீட்டு கடன் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கே கூறபட்டுள்ள திட்டங்கள் எல்லாம் விவசாயிகளுக்கு நேரடியாக பணப்பலன் கிடைக்கக்கூடிய திட்டங்களாகும். இதுதவிர இன்னும் ஏராளமான அறிவிப்புகளும் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் இதில் கறிக்கோழி வளர்ப்பு மற்றும் விற்பனைக்கான தொழில் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மலர் சாகுபடியை ஊக்குவிக்க மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. வெண்ணெய் பழம் சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | TN Agriculture Budget 2025: ஆரம்பமே அமர்க்களம்.. வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

மேலும் படிக்க - TN Budget LIVE வேளாண் பட்ஜெட் இன்று, விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்புகள், பயிர்க்காப்பீடு, புதிய திட்டங்கள்

மேலும் படிக்க - கிசான் கிரெடிட் கார்டு திட்டம்: தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை, நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

மேலும் படிக்க - தமிழக அரசு வழங்கும் ரூ. 2000 உதவித்தொகை! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News