Kalaingar Magalir Urimai Thogai Latest News: தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். அப்பொழுது தொடர்ந்து பல அறிவிப்புக்களை வெளியிட்ட அவர், 'மகளிர் உரிமைத்தொகை மற்றும் இலவச பேருந்து பயணம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதுக்குறித்து பார்ப்போம்.
மகளிர் நலன் ஆணுக்கு இங்கே பெண் நிகர் எனும் சரிநிகர் சமத்துவப் பாதையில் மகளிர் நலனுக்காக பல்வேறு முன்னோடி நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மகளிருக்கு சொத்துரிமையும், கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தனி இட ஒதுக்கீடும் அளித்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான இந்த திராவிட மாடல் அரசு மகளிரின் முன்னேற்றத்திற்கு பல புதுமையான திட்டங்களை கடந்த நான்கு ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பதவி ஏற்ற நாளிலேயே கையெழுத்திட்ட முதல் ஐந்து கோப்புகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கும் "விடியல் பயணம்" என்ற மகத்தான திட்டமும் ஒன்று. தமிழ்நாட்டு மகளிர் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள திட்டத்தின் மூலம் பேருந்து பயணம் செய்வோர்களில் பெண்களின் சதவீதம் 40 லிருந்து 65% ஆக உயர்ந்துள்ளது.
தினமும் சராசரியாக 50 லட்சம் மகளிர் பேருந்துகளில் இதுவரை 642 கோடி பயணங்களை மேற்கொண்டு மகத்தான இந்த திட்டத்தினால் பெண்கள் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் சேமிக்க முடிகிறது என மாநில திட்டக்குழு நடத்தி ஆய்வில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்திற்காக மானியத்தொகை 3,600 கோடி ரூபாயை 2025-26 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் அரசு ஒதுக்கியுள்ளது.
மகளிர் நலத்தி திட்டங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல் அறிவிக்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம், ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 15 லட்சம் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அவருடைய வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினால் பயன்பெறும் இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் என்பது அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு பேருதவையாக இருப்பது மட்டுமன்றி அவர்கள் கணிசமாக சேமிக்கவும் வழிவகுக்கிறது.
இதுவரை மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும்.
மேலும் படிக்க - TN Budget 2025: சென்னைக்கு அருகே வரும் புதிய நகரம்! இனி எல்லாமே அங்கே தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









