Tamil Nadu Budget 2025: 2025-26 நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் 2.40 மணிநேரம் பட்ஜெட் உரையை வாசித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய திமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தன.
மேலும், அடுத்தாண்டு 2026 சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து திமுகவும் தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி பல்வேறு அறிவிப்புகளையும், திட்டங்களையும் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகளை இங்கு காணலாம்.
Tamil Nadu Budget 2025: முக்கிய அறிவிப்புகள்
- இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக ரூ.13,807 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுவரை பலன் பெறாத தகுதிவாய்ந்த மகளிர் விண்ணப்பிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
- 100 கோடியில் சென்னை அறிவியல் மையம்
- 2000 சுயசார்பு தொழிலாளர்களுக்கு E-bike வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்விக்கி, சோமாட்டோ நிறுவனங்களில் டெலிவரி சேவை செய்பவர்களுக்கு இது உதவும்.
- காஞ்சிபுரம் அரசு அண்ணா மருத்துவமனை ரூ.120 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
- மதுரை மற்றும் கடலூரில் ரூ.250 கோடியில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும். இதனால், 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- ஓசூரில் ரூ.400 கோடியில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படும்.
- காலை உணவுத்திட்டம் அரசு உதவி பெரும் பள்ளிக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. 3.14 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- திருச்சியில் 250 ஏக்கரில் பொறியியல் மற்றும் வர்த்தகத் தொழில் பூங்கா அமைக்கப்படும், இதில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு
- சென்னை பெருநகர் பகுதிகளில் ரூ. 88 கோடியில் மழை நீர் உறிஞ்சும் 7 பல்லுயிர் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- திருச்சி , மதுரை , ஈரோடு, கோவை , நெல்லை நதிக்கரை மேம்பாட்டிற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | TN Budget 2025: பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்புகள்!
- புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் ரூ.6,668 கோடியில் 7 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். இதனால் 30 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.
- 10,000 மகளிர் சுய உதவிக் குழு உருவாக்கப்படும். ரூ.37,000 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
- வேளச்சேரியில் ரூ.310 கோடியில் புதிய பாலம் அமைக்கப்படும். இதனால், 7 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.
- மாணவியர் விடுதிகள் சென்னை, கோவை, மதுரையில் ரூ. 275 கோடியில் அமைக்கப்படும். இதனால், 1000 மாணவிகள் பயன்பெறுவர்.
- நாட்டில் சிறந்த பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக் கழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- 45 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும். இதன் காரணமாக ஐ. நா அங்கீகரித்த 193 மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும்.
- கிராம சாலைகள் மேம்பாட்டிற்கு ரூ.2200 கோடி ஒதுக்கப்படும். இதில், 6100 கி.மீ., சாலைகள் அமைக்கப்படும்.
- பள்ளிப்பாடத்தில் செஸ் விளையாட்டு சேர்க்கப்படும்.
- விண்வெளி தொழில் நுட்ப நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
- அனைத்து மாநகராட்சியிலும் முதல்வர் படைப்பகம் உருவாக்கப்படும்.
- இருமொழி கொள்கையில் மாற்றமில்லை. ஒன்றிய அரசு கொடுக்காத கல்வி நிதிக்கு பதிலாக தமிழ்நாடே ரூ.2000 கோடி ஒதுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கோவளத்தில் 14 டிஎம்சி கொள்ளவு கொண்ட புதிய நீர் தேக்கம் ரூ350 கோடியில் அமைக்கப்படும். இதனால், 3010 ஏக்கர் பயன்பெறும்.
- செமி கண்டக்டர் இயந்தரத் தொழிற்பூங்கா கோவை (சூலூர், பல்லடம்) பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்.
- புதிய புனல் மின் நிலையங்கள் ரூ.11,721 கோடியில் வெள்ளிமலை, ஆழியாறு பகுதிகளில் அமைக்கப்படும்.
- சென்னை, தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 6 கடற்கரைக்கு நீலக் கொடி சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
- ரூ.70 கோடி செலவில் 700 CNG பேருந்துகளாக மாற்றம் செய்யப்படும்.
- சென்னைக்கு 950 மின் பேருந்துகள், கோவைக்கு 75 மின் பேருந்துகள், மதுரைக்கு 100 மின் பேருந்துகள் என மொத்தம் 1,125 மின் பேருந்துகள் பெறப்படும்.
- 19,000 கைவினையர்களுக்கு மானியமாக ரூ.74 கோடி வழங்கப்படும்.
மேலும் படிக்க | 2025 தமிழக பட்ஜெட்டில் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? முழு பட்டியல்
- 10 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்படும்.
- உலக ஒலிம்பியாட் செஸ் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படும்.
- சமூக நல்லிணக்க ஊராட்சிகள் விருது வழங்கப்படும். அதாவது, 10 ஊராட்சிகளுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் 5 லட்சம் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும்.
- ரூ.125 கோடியில் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களுக்கு திருப்பணிகள் நடைபெறும்.
- பழமையான தேவாலயங்களைப் புதுப்பிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- பெற்றோர் இருவரையும் இழந்த 50 ஆயிரம் குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும்.
- சென்னை கோவையில் ரூ.100 கோடியில் அடிப்படை அறிவியல் & கணித ஆராய்ச்சி படிப்புகள் மையம் அமைக்கப்படும்.
- சென்னை சீராக்க குடிநீர் திட்டத்திற்கு ரூ.2423 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 102 கூட்டு குடிநீர் திட்டங்கள் மறு சீரமைப்பு ரூ.675 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சென்னைக்கு அருகில் உலகத்தரத்தில் புதிய நகரம் அமைக்கப்படும்.
- 10 இடங்களில் ரூ.77 கோடி செலவில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்.
- கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டிற்கு ரூ. 2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- அன்பு சோலை முதியோர் பராமரிப்பு மையம் 10 இடங்களில் அமைக்கப்படும்.
- அரசு பொறியியல் கல்லூரிகளில் ரூ.50 கோடியில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும்.
- கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய வீடுகள் அமைக்க ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- மூன்றாம் பாலினத்தவர்களை ஊர்க்காவல் படையில் சேர்க்கும் திட்டம் கொண்டுவரப்படும்.
- வியன் திறன் மிகு மையங்கள் அமைக்க ரூ.50 கோடி (VR) நிதி ஒதுக்கப்படும்.
- 4000 மெகா வாட் திறன் கொண்ட மின் கலன் சேமிப்பு அமைப்புகள் அமைக்கப்படும்.
- கடல் சார் வள அறக்கட்டளைக்காக ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- வேட்டை பறவைகள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
- ரூ.40 கோடி செலவில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் சிலைகளுக்கு மரபு சார் காட்சி அரங்கம் அமைக்கப்படும்.
- தமிழ்நாட்டில் 2025-26ஆம் ஆண்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி கூடம் பல்வேறு இடங்களில் அமைக்கப்படும்.
- பழங்குடியினர் வாழ்வாதாரக் கொள்கை ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ரூ.50 கோடியில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் கொண்டுவரப்படும்.
- நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் சீரமைப்பு 5,256 குடியிருப்புகள் உருவாக்கப்படும். இதற்கு ரூ.1,051 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- 14.2 கி.மீ நீளம் கொண்ட திருவான்மியூர் - உத்தண்டி நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை திட்டத்திற்கு ரூ.2,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ரூ.150 கோடியில் புராதானக் கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஒரகடம் செய்யாறு தொழில் வழித்தடத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட படகுகளுக்கு 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
- மீன் பிடி தடை கால ஊக்கத்தொகை ரூ.8,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- இலங்கை சிறையில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
- நான்காண்டுகளில் 78, 882 பணிகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 40,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 12.5 கி.மீ நீளம் கொண்ட மேற்கு புறவழிச்சாலை - கோயம்புத்தூருக்கு ரூ.348 கோடியும், 12.4 கி.மீ நீளம் கொண்ட புறவழிச்சாலை - திருநெல்வேலிக்கு ரூ.225 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை - செங்கல்பட்டு – திண்டிவனம் , சென்னை – காஞ்சிபுரம்-வேலூர், கோவை-திருப்பூர் –ஈரோடு-சேலம் உள்ளிட்ட பகுதிகளில், மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பு (local train) ஏற்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.
- நகர்ப்புரப் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யப் புதிய திட்டம் ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு 3000 புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
- எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினால் ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- உதகையில் ரூ.70 கோடியில் புதிய பூங்கா அமைக்கப்படும்.
மேலும் படிக்க | தாயுமானவர் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2 ஆயிரம்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









