Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-2027 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலன், வருவாய்த் துறை மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்குப் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. ஆன்லைன் பட்டா வழங்கல் சாதனை
பொதுமக்களுக்கு நில உரிமை வழங்குவதில் தமிழக அரசு மைல்கல் சாதனையைப் படைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 23 லட்சத்து 56 ஆயிரத்து 623 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆன்லைன் பட்டா: நிர்வாக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, இதுவரை 77,800 இணையவழி (Online) வீட்டுமனைப் பட்டாக்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
2. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை: ரூ. 1,471 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான நிதியை ஒதுக்கியுள்ளது.
1. நிதி ஒதுக்கீடு: கடந்த 2021-22ல் 814 கோடி ரூபாயாக இருந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கான நிதி, தற்போது 1,471 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
2. உதவித்தொகை உயர்வு: பராமரிப்பு உதவித்தொகை பெறத் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை மற்றும் இதர சலுகைகள் தொடர்ந்து உறுதி செய்யப்பட்டுள்ளன.
3. பணி ஒதுக்கீடு: அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படுவதையும், பதவி உயர்வுகளில் முன்னுரிமை அளிக்கப்படுவதையும் அரசு உறுதி செய்துள்ளது.
3. சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்: ரூ. 5,463 கோடி ஒதுக்கீடு
ஏழை எளிய மக்கள், முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு இந்த இடைக்கால பட்ஜெட்டில் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்காக 5,463 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான முதியோர்கள் மற்றும் விதவைகள் தொடர்ந்து தடையின்றி உதவித்தொகை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
4. உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் 38 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் குறித்து பட்ஜெட்டில் தெரவிக்கப்பட்டது. அதில், பொதுமக்களின் குறைகளுக்குச் செவிமடுப்பதே சிறந்த நிர்வாகம்" என்ற கொள்கையின் அடிப்படையில், தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மக்கள் அரசு நிர்வாகத்தை எளிதாக அணுகும் வகையில், இந்த அரசு பொறுப்பேற்றவுடன் 'முதல்வரின் முகவரி' என்ற தனித் துறை உருவாக்கப்பட்டது. அதனடிப்படையில், மக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பதற்காக மாநிலம் முழுவதும் 4,835 முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 23.50 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. இத்திட்டத்திற்குக் கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கி, அரசுச் சேவைகளை விரைவாக வழங்கும் நோக்கில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் மொத்தம் 10,000 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து 38.53 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களில் இதுவரை 38.48 லட்சம் மனுக்களுக்கு இறுதித் தீர்வு காணப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் சிறப்பான அணுகுமுறையினால், அரசின் நலத்திட்டங்களையும் சேவைகளையும் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி எளிதாகப் பெற முடிந்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சொந்தத் தொழில் தொடங்க ஆசையா? தமிழக அரசின் இலவச பயிற்சி: சென்னையில் பொன்னான வாய்ப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









