Tamil Nadu Latest News: தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளை சேர்ந்த 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதேபோல ஒன்பது மாவட்ட ஆட்சி தலைவர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதுக்குறித்து முழு விவரங்களை பார்ப்போம்.
ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் என்ன காரணம்?
தமிழகம் முழுவதும் அரசுப் பணிகள் சிறப்பாக நடைபெறவும், நிர்வாக வசதிக்காகவும் அவ்வப்போது ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
யாருக்கு என்ன பொறுப்பு?
தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் யாருக்கு என்ன பணி? என்ன நியமனம்? எந்த துறை? போன்ற முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய ராஜேந்திர ரத்னு சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் முதன்மைச் செயலாளர், சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குனராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ், வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சி தலைவராக கிரேஸ் லால்ரின்டிக்கு பதிலாக அருண்ராஜ் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவராக இருந்த அருண்ராஜ் தற்போது பெரம்பலூர் மாவட்ட ஆட்சி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதேபோல திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவராக டாக்டர் நரணவரே மணி சங்கர்வார் நியமிக்கப்பட்டிருக்கிறார். கிறிஸ்துராஜ் அவர்களுக்கு பதிலாக இவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
திருச்சியின் புதிய கலெக்டராக வே சரவண நியமிக்கப்பட்டிருக்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய கலெக்டராக திரு சினேகா பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
மதுரையின் புதிய ஆட்சி தலைவராக பிரவீண குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சி தலைவராக டாக்டர் சுகபுத்ரா நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கனவே திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்தார்.
ஈரோடு மாவட்டத்தின் புதிய ஆட்சி தலைவராக கந்தசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஈரோடு மாவட்டத்தின் ஆட்சி தலைவராக இருந்த ராஜகுமார் சுங்கரா பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
துர்க்காமூர்த்தி நாமக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சிவகங்கை மாவட்டத்தின் புதிய ஆட்சி தலைவராக பொற்கொடி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஒன்பது மாவட்டங்களுக்கு புதிய ஆட்சி தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
திருநெல்வேலி மாநகராட்சியின் ஆணையராக டாக்டர் மோனிகா ராணா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
திருச்சி மாநகராட்சி ஆணையராக மதுபாலா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பானோத் மிருகேந்தர் மிர்கேந்திரலா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஆவடி மாநகராட்சி ஆணையராக சரண்யா நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சென்னையில் நிர்வாகத்ததுறை நகராட்சி நிர்வாகத்ததுறையின் இணைய ஆணையராக அனாமிக்கா நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக சில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார். திருமதி காகர்லா உசேவுக்கு பதிலாக சில்பா பிரபாகர் சதீஷ் வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ராஜேந்திர ரத்னு மத்திய அரசு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் முதன்மை செயலாளராக ராஜேந்திர ரத்னு நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதேபோல கூடுதல் தலைமை செயலாளராக இருக்கக்கூடிய விஜயகுமார் இப்போது நில சீர்திருத்த ஆணையராக அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
சமூக சீர்திருத்த துறையின் புதிய செயலாளராக வள்ளலார் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாளவு துறையின் ஆணையராக வள்ளலார் பணி பொறுப்பு வகித்தார்.
நிதித்துறை செயலாளர் நாகராஜன் இப்போது வணிகவரித்துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். வணிகவரித்துறை ஆணையராக இருந்த ஜெகநாதன் ஓய்வு பெறுவதை அடுத்து, தற்போது நிதித்துறை செயலாளராக இருந்த நாகராஜன் வணிகவரித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
உயர்கல்வித்துறைக்கு புதிய செயலாளராக முனைவர் சங்கர் நியமிக்கப்பட்டிருக்கிறார். சமயமூர்த்திக்கு பதிலாக உயர்கல்வித்துறையின் புதிய செயலாளராக சங்கர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மனிதவள மேன்மை துறையின் முதன்மை செயலாளராக சமயமூர்த்தி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சமயமூர்த்தி உயர்கல்விறையிலிருந்து மனிதவள மேலாண்மை துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முதன்மை செயலாளராக கோ பிரகாஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார். மனிதவள மேலாண்மை துறையின் முதன்மை செயலாளராக இருந்த பிரகாஷ் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாடு பாசன நவீன மயமாக்கள் திட்டத்தின் செயலாளராக டாக்டர் பிரபாகர் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
நிதித்துறை சிறப்பு செயலாளராக வெங்கடேஷ் மத்திய அரசு பணியிலிருந்து, மாநில பணிக்கு திரும்புவதை ஒட்டி அவர் நில சீர்திருத்த துறைக்கு விஜயகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். கூடுதல் தலைமை செயலாளராக இருந்த விஜயகுமார் நில மற்றும் சீர்திருத்த துறையின் கூடுதல் தலைமை செயலாளராக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் மேலாண்மை இயக்குனராக சிவராசு நியமிக்கப்பட்டிருக்கிறார்.
திருமதி ஸ்ரேயா சிங் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
திரு வீர் பிரதீப் சிங் பொதுத்துறை அரசு துணை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசு சிறப்பு செயலாளராக இருந்த கணேஷ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழகம் முழுவதும் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு துறைகளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒன்பது மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









